உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புணரியல்]

59

2. வேற்றுமைப் புணர்ச்சி:— இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை இறுதியாக ஆறு வேற்றுமைகளின் உருபுகளும், இடையே வெளிப்பட்டு அல்லது மறைந்து நிற்கப் பதங்கள் புணரும் புணர்ச்சிக்கு வேற்றுமைப் புணர்ச்சி என்று பெயர்.

உ-ம்

வேற்றுமை உருபு மறைந்துநின்றது வேற்றுமை உருபு வெளிப்பட்டுநின்றது
வீடு கட்டினான் 2. வீட்டைக் கட்டினான்
கல்லெறிந்தான். 3. கல்லாலெறிந்தான்.
இராமன் மகன். 4. இராமனுக்கு மகன்.
மலைவீழாறு. 5. மலையின்வீழாறு.
அவன்கை 6. அவனதுகை.
மலைக் குகை. 7. மலையின் கட்குகை.

3. அல்வழிப்புணர்ச்சி:— வேற்றுமையல்லாத வழியில் சொற்கள் பொருத்தும் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சியாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/60&oldid=1468885" இலிருந்து மீள்விக்கப்பட்டது