உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புணரியல்]

61


புணரியல், வேறுபாடுமின்றி இருந்தபடியே இருக்கச் சேர்ந்திருத்தல் காண்க.

5.விகாரப்புணர்ச்சி:- விகாரத்தோடு கூடிய புணர்ச்சி விகாரப் புணர்ச்சியாம்.

6. விகாரங்கள்:- தோன்றல், திரிதல், கெடுதல் என்பன விகாரங்களாம். தோன்றல்= இல்லாதது உண்டாதல் திரிதல்= இருப்பதில் ஒன்று மற்றொன்றாதல் கெடுதல்=இருப்பது இல்லாமற்போதல்.

உ - ம். மா + காய் = மாங்காய் - தோன்றல்

        பொன் + குடம் = பொற்குடம் - திரிதல்
        மரம்+வேர் = மரவேர் - கெடுதல். 
               உயிரீற்றுப் புணர்ச்சி.

உயிர்வந்து புணர்தல். 7. உடன்படுமெய்:--- உயிரும் உயிரும் மயங்கா. ஆதலால் உயிரீற்று மொழியுடன் உயிர்முதன் மொழிவந்து புண-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/62&oldid=1533945" இலிருந்து மீள்விக்கப்பட்டது