உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

[எழுத்ததிகாரம்

உயிர்த்தொடரின் ஈற்றில் வரும் குகர துகர வீறுகளும் சிறுபான்மை இரட்டிக்கும்.

உ - ம். ஆட்டுப்பால் முருட்டுக்கால், பாற்றுக்கால் வயிற்றுத்தீ || வேற்றுமை காட்டரண் குருட்டுப்பூனை ஏற்றேனம் களிற்றுப்பன்றி || அல்வழி

எருதுக்கால் வெருக்குக்கண் || சிறுபான்மை து, கு; இரட்டின


24. வேற்றுமையில் மென்றொடர்க்குற்றுகரங்களுட்பல தம்மின வன்றொடராக மாறும். சில அவ்வாறு மாறா. அல்வழியிலும் சிறுபான்மை வன்றொடராகும்.

உ - ம். குரக்குக்கால் மருத்துப்பை || வேற்றுமையில் மாறின அற்புத்தளை- அல்வழியில் மாறினது பந்துத்திரள் ஞெண்டுக்கால் || மாறாதன

25. திசைப்பெயரோடும் பிறப்பெயரோடும் புணர்கையில் வடக்கு, கிழக்கு என்னும் நிலைமொழிகளில், ஈற்றுயிர் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/71&oldid=1476570" இலிருந்து மீள்விக்கப்பட்டது