இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புணரியல்]
75
ஈற்றுயிர்மெய் கெட்டுத்தகரம் னகரமாகத்திரியும்.
உ-ம். பன்னிரண்டு.
m. ஒன்பதை ஒழித்த ஒன்றுமுதல் பத்தீறாகிய ஒன்பதெண்களும் இரட்டித்து வந்தால் நிலைமொழியின் முதலெழுத்தல்லாதவை எல்லாங் கெட வருமொழி முதல் உயிராயின் வகரமும் மெய்யாயின் வந்த மெய்யும் மிகுதல் முறையாம்.
உ - ம். இவ்விரண்டு, மும்மூன்று, ஐவைந்து.
28. பூ என்ற சொல்லின் பின் வல்லினம் வந்தால் வந்த வல்லினம் அல்லது அதற்கினம் மிகும்.
உ - ம். பூக்கொம்பு, பூங்கொம்பு.
29. நாழி என்பதற்குப்பின் உரிஎன்ற சொல்வந்தால் நிலைமொழியின் ஈற்றுயிர் மெய்கெட்டு டகரம்தோன்றும்.
உ - ம். நாழி + உரி ; நாடுரி.