உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புணரியல்.]

81

39. மகர வீற்றுச்சொற்கள்: ஈறுகெட்டு உயிரீற்றைப்போலப் புணர்வதும், வல்லினம் வந்தால் நிலைமொழியீற்று மகரம் அவ்வல்லினத்திற்கு இனமாகத்திரிதலும் ஆகும்.

உ-ம். வட்டக்கல்
வட்ட நீண்டது
வட்டவடி

உயிரீறொத்தது.

மரங்குறிது இனமாத்திரிந்தது,

40. a. ய்,ர், ழ்,என்பவைகளுக்குப் பின் க, ச, த, பக்கள் வந்தால் அல்வழியில் இயல்பாதலும் மிகுதலுமாகிய விதியைப்பெறும். வேற்றுமை வழியில் வந்த வல்லினமாவது அதற்கினவெழுத்தாவது மிகும்.

உ-ம். யாழ்சிறிது தேர்பெரிது வேய்கடிது அல்வழியில் இயல்பு.

கார்ப்பருவம்; அல்வழியில் மிகுந்தது
நாய்க்கால்; வேற்றுமையில் மிகுந்தது
வேய்ங்குழல்; வேற்றுமையில் இனம் மிகுந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/82&oldid=1471020" இலிருந்து மீள்விக்கப்பட்டது