இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புணரியல்]
83
42. சுட்டுப் பெயர்களாகிய அவ், இவ், உவ் என்பவைகளின் ஈற்றிலிருக்கின்ற மெய்யானது வருமொழியில் வல்லினம் வந்தால் ஆய்தமாகத் திரியும். மெல்லினம் வந்தால் மெல்லினமாக திரியும். இடையினம் வரும்போது இயல்பாகும். அவ் இவ் உவ் என்பவற்றுக்குமுறையே அவை இவை உவை என்பன பொருள்.
உ - ம். அவ் + கடிய - அஃகடிய. அவ்+ஞானம்- அஞ்ஞானம் அவ்+யாவை - அவ்யாவை.
43. தெவ் என்பதன் ஈற்றில் இருக்கின்ற வகரம் யகரமல்லாத மெய்கள் வரும்போது உகரச்சாரியை பெறும், வருமொழியில் மகரம் வந்தால் மகரமாகத் திரியும்.
உ - ம். தெவ்+கடிது – தெவ்வுக்கடிது. தெவ்+மன்னர்–தெம்மன்னர்.
44. வருமொழி விகாரம்.—வருமொழி முதலில் நிற்கும் தகரம்: ன், ல் என்ப