34
மெய்யறிவு.
க— ரை:—மனமானது உனக்கு கெடுதி செய்யும் பகையின் இனமென்று நினைத்து, அது பற்றும் விஷயங்களை யெல்லாம் கவனித்து, அது நல்ல விஷயங்களில் மாத்திரம் செல்லும்படி செய்வாயாயின், உன்னைப்பற்றிய தீயவையாவும் அழிந்துபோம்.
தான் இரண்டும் அசைகள்.
மனத்தின் பின் செல்லாது மாணறங்கள் சார்ந்த புனத்தின்பி னித்தமதைப் போக்கின்—றனத்தும் பிறவற்றுஞ் சால்பெய்திப் பேரின்ப வெள்ளத் திறவற்று வாழ்வா யிவண். (௩௩)
அ—ம்:— (நீ) மனத்தின் பின் செல்லாது, (நீ) அதனை மாண் அறங்கள் சார்ந்த புனத்தின் பின் நித்தம் போக்கின், (நீ) இவண் தனத்தும் பிறவற்றும் சால்பு எய்தி, இறவற்றுப் பேரின்ப வெள்ளத்து வாழ்வாய்.
ப—ரை :—மனத்தின் பின் செல்லாது — (உன்) மனம் போன போக்கிலே போகாது, அதை— (நீ)அம் மனத்தை, மாண் அறங்கள் சிறந்த தருமங்கள், சார்ந்த புனத்தின் பின்—பொருந்திய கொல்லையின் பின்னர், போக்கின் செலுத்துவாயாயின், இவண்-(நீ) இவ்வுலகத்தில், தனத்தும் செல்வத்திலும், பிறவற்றும்— அறிவு ஆரோக்கியம் முதலியவற்றிலும், சால்பு எய்தி-நிறைவையடைந்து, இறவற்று-அழிவில்லாது, பேரின்ப வெள்ளத்து-நிரதிசயாகந்தப் பெருக்கில், வாழ்வாய்-எப்பொழுதும் வாழ்ந்திருப்பாய்.