உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

இவ்விரண்டு பெயர்களும் வருவதிலிருந்து கம்பன் காலத்திலிருந்து சேதிராயனையும் சடையனையும் தான் குறிக்கின்றன என்ற ஒரு தலையாகக் கூறிவிட முடியாது.

ஒட்டக்கூத்தனுக்கும் கம்பனுக்கும் நேரே சம்பந்தத்தைக் காட்டும் கதைகள் நமக்குத் தெரிந்தமட்டில் நாம் ஏற்கனவே சொல்லியதைத் தவிர இரண்டே இரண்டுதான். அவைகளில் ஒன்று, பின்வருமாறு சோழன் இவ்விரண்டு புலவர்களையும் ராமாயணம் பாட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சிலகாலம் கழித்து அவர்களை வரவழைத்துக் காவியம் எதுவரையில் சென்றிருக்கிறது என்று இருவரையும் கேட்க, சும்பன் எழுதத் துவக்கியே இல்லாவிட்டாலும் ஒட்டக்கூத் தனுக்குமேல் தான் எழுதிவிட்டதாகச் சொல்ல வேண்டும் என்று சேதுபந்தனப் படலம் வரையில் தான் பாடியதாகச் சொல்லி, அங்கேயே இந்தப் பாட்டைக் கவனம்செய்து பாடினானாம்.

குமுதன் இட்ட குலவரை, கூத்தரின்
திமிதம் இட்டுத் திரையும் திரைக்கடல்
துமிதம் ஊர்புக வானவர் துள்ளினார்
அமுதம் இன்னும் எழும்எனும் ஆசையால்!

இந்தச் செய்யுளில் வரும் துமிதம் என்னும் வார்த்தை நிகண்டுகளிலாவது வழக்கிலாவது இல்லை என்று


புதுவைச் சேதிராயனும் வெண்ணெயூர்ச் சடையனும் ஒரே மனிதன் தான் என்று, மூவலூர்ச் சிவன் கோவிற்சுவர்களில் ஒன்றில் வெட்டி யிருக்கும்.

தே மா வயங்கு செய்யா...ம பாற்கடல் சேதியர் கோன்
மாமால் புதுவைச் சடையன்...

என்னும் வரிகளும் வேறு பிறவும் காட்டுகின்றன என்று பி. அ. நாராயணசாமி ஐயர், "செந்தமிழ்" —இல் சொல்லுகிறார். பழைய சாத்திரங்தனில் இருக்கும் மயக்கங்களைக் களைந்து உண்மையைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமான காரியமாக இருக்கிறது!