இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
445
யினும் இக் கொளுக்கள் நானூற்றையும் ஒருங்கடைவு செய்தால் கோவை நூல் கிளவிகளின் ‘கொளுவடைவு’ நூல் ஒன்று வாய்த்தல் உண்மையாம்.
1. காட்சி | : | “மதிவாணுதல் வளர்வஞ்சியைக்
கதிர் வேலவன் கண்ணுற்றது.” |
2. ஐயம் | : | “தெரிவரியதோர் தெய்வமென்ன
அருவரைநாடன் ஐயுற்றது.” |
3. தெளிதல் | : | “அணங்கல்லளென் றயில்வேலவன்
குணங்களைநோக்கிக் குறித்துரைத்தது.” |
400. ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல்:
“இரும்பரிசில் ஏற்றவர்க்கருளி
விரும்பினர் மகிழ மேவுதலுரைத்தது.”
கொளு வஞ்சிநடை பயிலுதல் அறியத்தக்கது. எதுகை மோனை இயைந்து நடத்தலும் எண்ணத்தக்கது.
பழைய உரையும், பேராசிரியர் உரையும் கொளுக்களுக்கும் உண்டு.