பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழர் முன்னோர் மும்முடிச்சோழன் முதலிய பெயர்கள் வழங்கின இவன் காலத்திலிருந்து தான், மெய்க்கீர்த்தி என்னும் புகழ்ச்சிப் பாடல்கள் சாஸனங்களிற் பயில்வனவாயின. இன்னும் இவன் பெருமைகள் பல ; விரிக்கில் பெருகும். இவனுடைய அருமை மகன், இராஜேந்திரன் என் பவன். இவன் பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டவன் என்று சாஸனங்களிற் புகழப்படுபவன். தன் தந்தை வளர்த்த சோழசாம்ராஜ்யத்தைக் குன்றின் மேலிட்ட தீபம் போல உலகெங்கும் ஓங்க வைத்தவன் இவன் என்பதை அறியாதார் இல்லை. கங்கதேசம், ஈழநாடு, மலைநாடு, இரட்டபாடி, ஒட்டரம், கோசலம், இலாடம், வங்காளம் முதலிய தேசங்கள் இவனால் வெல்லப்பட்டன. இவற்றோடு, அலைகடனடுவிற் பல கலஞ் செலுத்தி, மாநக்கவாரம், கடாரம், மாப்பப்பாளம் முதலிய கீழ்கடற்கு அக்கரையிலுள்ள நாடுகளை வென்று, அந்நாட்டரசர்களையும் தனக்குப் பணியச் செய்தனன். இவன் போல அரிய செயலைச் செய்த தமிழ் வேந்தர், இவன் முன்னோனான கரிகாலனும் சேர வேந்தனான செங்குட்டுவனுமேயன்றி வேறு எவரும் இல்லை. இவன் கங்கை நாடுகளை வென்ற தன் அடை யாளமாகக் கங்கைகொண்ட சோழபுரத்தை ஏற்படுத்தி, அந்நகரைத் தன் தலைநகராகக் கொண்டும், கங்கை கொண்ட சோளீச்சுரம் என்ற திருக்கோயிலெடுப்பித்தும் சிறப்பித்தனன். பண்டித சோழன், முடிகொண்ட சோழன், விக்கிரம சோழன் முதலிய பல பெயர்களை இவன் தரித்தவன். இவனுக்கு இராஜாதிராஜன், இராஜேந்திரன், வீரராஜேந்திரன் என்ற மூவர் புதல் வர்களும், அம்மங்காதேவி என்ற ஒரு மகளும் உண்டு. இவர்களுள் ஆண் மக்களெவர்க்கும் மகப்பேறு இல்லை. அதனால் இம்மக்களே ஒருவர்பின் ஒருவராய்ச் சோழ 1077- 2