உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 மூன்றாம் குலோத்துங்க சோழன் களுக்குரிய பெயரையும், வீரச்செயல் முதலியவற்றாற் பெற்ற பட்டப்பெயரையும் தரித்திருந்தமை பலவிடங் களிலும் காணலாகும். ராஜர் அதிராஜர் பிள்ளை ராயர் அதியரையர் முதலி அரையர் பேரரையர் நாடாள்வான் முதலிய சிறப்புச் சொற்கள் இணைந்திருந்தல் காணலாம். இவற்றுள், பிள்ளை என்பது பிள்ளை -முனைய தரையர் பிள்ளை - சேந்தமங்கல முடையான் பிள்ளை -ஜய தரப்பல்ல வரையர் என்பன போல முன் வருஞ் சிறப்புப் பெயர்க ளாகும். இச்சொல் பிராமண ஆசாரியர்களுக்கும் அக் காலத்து வழங்கியது உண்டு. 'பிள்ளை அமுதனார்', 'பிள்ளை லோகாசாரியர்' என்பன காண்க. சில தலைவர்களுடைய சிறப்புப் பெயர்களிலிருந்து அவர்கள் செய்த காரியமும், வகித்த நிலைமையும் தெரியலாகும். சேனைமீகாமன் இராஜராஜ சேதிய ராயன் என்பவன் சோழசேனாதிபதியா யிருந்தவன் என்பதும், பாண்டிய நாடு கொண்டான் இராஜராஜ சம்புவராயன் என்பான் பாண்டிய நாட்டுப் போரில் வென்றவன் என்பதும், அத்திமல்லன் குலோத்துங்க சோழன் என்பவன் யானைப் படைத்தலைவன் என்பதும், தன்ம பரிபாலன இராஜாதிராஜ மலையரையன் என்பான் தர்ம காரியங்களைக் கண்காணித்து வந்தவன் என்பதும் அறியக்கூடியன. போரில் வீரங் காட்டிய தலைவர்கள் கண்டர்சூரியன் வீரமழகியான் தனிநின்று வென்றவன் வீரபயங்கரன் அமராபரணன் வாணிலைகண்டான் வீரராக்ஷஸன் சூரநாயகன் என்னும் இத்தகைய பட்டங்கள் பெற்றுள்ள செய்தியும்