________________
அரசியல் 89 மொழியாக அருளிச்செய்வான். அவ் வருளிச்செயல் திருமந்திரவோலைய திகாரியால் பட்டோலை கொள்ளப் பட்டு, உடன் கூட்டத்து அதிகாரிகளின் கையொப்பத் துடன் உரிய கீழதிகாரிக்கு அனுப்பப்படும். இவ்வா றன்றி, அரசனுக்கு வேண்டியவர்கள் அவனிடம் நேரே தங்கள் குறை முறைகளை விண்ணப்பித்து அவன் ஆணை யைப் பெறுவதும், சொந்தக் காரியமானவற்றை அரசனே பிறரோடு ஆலோசிக்காமல் ஆணையிடுவதும் உண்டு . மகா சபைகள் :- அரசியல் துறைகள் மேற்கூறிய அதிகாரிகளின் மேற்பார்வைக்கு உட்பட்டிருந்தது போலவே, ஜன சமுதாயத்துக்குரிய பொதுக் காரியங் களும் நியாய பரிபாலனமும் நகரங்களிலும் கிராமங் களிலும் அமைந்த சபைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. இச்சபையின் அங்கத்தினரெல்லாரும் பொது மக்களால் தெரிந்தெடுக்கப் பட்டவர்களே. அவ்வாறு தெரிந்தெடுப்பதற்கும், தெரிந்தெடுத்த அங்கத்தினர் செய்வதற்குரிய காரியாதிகளுக்கும் ஏற்ற விதிகள் செப்ப மாக அரசாங்கத்தாரால் அமைக்கப்பட்டிருந்தன. ஆயத்துறை, நியாயத்துறை, தேவதானம், திருவிடை யாட்டம், பள்ளிச் சந்தம், அகரப்பற்று, மடப்புறம் ஜீவிதப்பற்று, படைப்பற்று, வன்னியப்பற்று முதலிய பொதுவுரிமைகளெல்லாம் இவர்கள் மேற்பார்வையில் சிறிதும் குறைவில்லாமல் நடைபெற்றுவந்தன. இம் மகா சபையின் உட்பிரிவுகளான தர்மவாரியம், ஏரி வாரியம், தோட்ட வாரியம், ஊர்வாரியம், பொன் வாரியம் இவைபோன்ற கிளைச்சபைகளும் தாய்ச்சபை களுடன் ஒத்துழைத்து வந்தன. நம் வேந்தன் காலத்தில் இந்த மகாசபைகள் ஆலய முதலிய அறப்புறங்களுக்கு இறை கழித்துக் கொடுத்தும்