________________
குணாதிசயங்கள் 99 மதுராவிஜயத்தில் சேர பாண்டியரிடமிருந்து பெற்ற அளவற்ற திரவியங்களை இத்தலங்களுக்கு வாரிவழங்கி னான் இவ்வேந்தன். அவ்வெற்றியில் தான் பெற்ற பெய ரால் 'முடித்தலைக்கொண்ட பெருமாள் திருவீதி' என்று சிதம்பரத்தில் மேற்குத் தெரு வொன்று எடுத்துச் சிறப்பித்தான். சிவபக்தியிற் சிறந்து நின்றானா யினும் அந்நிய மதத்தவரிடமும் அவர் தெய்வங்களிட மும். கொடுமையும் வெறுப்பும் சிறிதும் காட்டாமல் பொதுநோக்கத்துடன் தன் அன்பையும் ஆதரவையும் செலுத்தி வந்தனன், நம் அரசர் பெருந்தகை. சைனப் பெரும் பள்ளிகளும், அமண் பெரியார்களும், சைன பண்டிதர்களும் இவனாற் பேணி ஆதரிக்கப்பட்டிருப் பதும், உடன்கூட்டத்துப் பெருமக்களுள் சைன அதிகாரி ஒருவரை இவன் உடையனாயிருந்ததுமே மேற் கூறியவற்றிற்குத் தக்க சான்றுகளாகும். (5) பிறந்த மாத நக்ஷத்திரங்கள் :- நம் குலோத் துங்கன் பிறந்தநாள் தைமாதத்து அஸ்தநக்ஷத்திர மாகும். இது, தன் பேரால், திருநறுக்குன்றைப் பெரும் பள்ளி அருகதேவர்க்கு ஆறாவது முதல் நம் பேராலே இராசாக்கணாயன் திருநாள் என்று தைமீ அத்தத்திலே தீர்த்தமாகத் திருநாள் எழுந்தருளுவிப்பதாகச் சொன் னோம் என்று இவன் கட்டளையிட்டிருப்பதனால் வெளியாகின்றது. அப்பெரும்பள்ளியின் தலைவர்கள் முன் பிலாண்டு எழுந்தருளுகிற வைகாசித் திருநா ளுடனே அரசன் பெயராலும் ஒரு விழா நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, அதற்கிணங்கிய நம் வேந்தன், அவ் விழாவிற்குத் தன் பெயர்களுள் ஒன்றையும், மாச நக்ஷத்திரங்களையும் தானே குறிப் பிட்டான். அக் குறிப்பிட்ட காலம், அவன் பேருக் கேற்றபடி அவன் பிறந்த மாத நக்ஷத்திரங்களாகவே