பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வங்களைக் கூறுமிடத்து, நுதல்விழி நாட்டத் திறையோன் முதலா--பதிவாழ் சதுக்கத்துத் தெய்வ மீறாக' என்று சுருங்கச்சொல்லி விளங்க வைத்துள்ளனர். பௌத்தக் கொள்கையினரான இவ்வாசிரியரும் சிவபெருமானையே முதலில் வைத்துக் கூறியிருப்பது கண்டு அறியத்தக்கது. எனவே, கடைச் சங்க காலத்தில் சைவசமயம் மிகச் சிறந்த நிலையிலிருந்தது என்பது தேற்றம். ஆனால், அக்காலத் திய சிவாலயங்கள் இந்நாளில் காண்பது அரிதாகும். ஆதலின், அப்பழங்காலத்துக் கோயில்களின் அமைப்பு எவ்வாறிருந்தது என்பது புலப்படவில்லை. ஆயினும், அக்கோயில்கள் செங்கற்களினால் எடுப்பிக்கப் பெற் நிருத்தல் வேண்டும் என்பது மாத்திரம் அறியப் படுகின்றது. கி. பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நம் தமிழகத்தின் வடபகுதியை ஆட்சிபுரிந்த முதல் மகேத்திர வர்மன் என்னும் பல்லவ மன்னனே சிறு குன்றுகளைக் குடைந்தும் கற்பாறைகளைக் கொண்டும் நம் நாட்டில் கருங்கற் கோயில்களை முதலில் அமைப்பித்தவன். சைவ சமயகுரவருள் ஒருவராகிய அப்பரடிகள் இவ்வேந்தன் காலத்தில் விளங்கியவர். அமண் சமயத் தொடர்புடைய வாய் அவ்வடிகளைப் பல்வகையானும் துன்புறுத்திய இம் மன்னன் பின்னர்ச் சைவசமயத்தைச் சாாந்து சிவபெரு மானுக்குக் கோயில்கள் எடுப்பித்து வழிபட்டமை அறிதற் குரியது. இவன் புதல்வதும் மாமல்லன் என்ற சிறப்புப் பெயர் உடையவனும் ஆகிய முதல் நரசிங்கலர்மன் ஆட்சிக் காலத்தில் தான் திருஞானசம்பந்த அடிகள் நிகழ்ந்தனர். ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த பல்லவ அரசனாகிய இரண்டாம்