பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 145 இப்பெரியார், அப்பரமேச்சுர விண்ண கரப் பதிகத் துக்கு முன் பாடிய அட்டபுயகரப் பதிகத்தின் முடிவில் “மன்னவன் தொண்டையர்கோன் வணங்கும் நீண்முடிமாலை வயிர மேகன் தன்வலி தன்புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து' (பெ. தி. 2, 8, 10-) என்று பாடுகின்றார். வயிரமேகன் என்ற பெரு வேந்தனது கீர்த்தியும் பிரதாபமும் சூழ்ந்துள்ள கச்சிமா நகரைச் சார்ந்த அட்டபுயகரம்' என்பது ஆழ்வார் அருளிய இத்தொடரின் கருத்தாதல் காணலாம். இவ்வயிரமேகன் யாவன் என்பது அறியப்படின் திருமங்கை மன்னன் காலமும் செவ்விதின் விளங்கக் கூடும் என்ற ஆராய்ச்சி எனக்குள் முதன்முதல் நிகழ லாயிற்று. இதன் காரணம், மேற்காட்டிய தொடரின் அமைப்பிலிருந்து அதனுட் கண்ட வயிரமேகன் ஆழ் வார்க்குச் சமகாலத்தவன் எனபதன்றி முற்பட்டவனாகக் கொள்ளத் தக்கவன் அல்லன் என்பது பெறப் படுதலேயாம். வயிரமேகன் இறந்ததற்குச் சில தலைமுறைக்குப் பின்பு ஆழ்வார் விளங்கியவராயின், அவ்வரசன் கீர்த்தி மட்டுமன்றி அவன் வலிமையும் கச்சியைச் சூழ்ந் திருந்தது என்று, பெரிதும் பிற்பட்டவர் பாடும்படி ஒருகாலும் நேர்ந்திராதென்பது திண்ணம், தங்காலத்து விளங்கியுள்ள அரசனை விட்டொழித்தும், எத்தனையோ மாறுபாடடைதற்குரிய காலத்தை இடையிட்டும், தமக்கு முன்னிருந்த அரசன் வலிமையானது சூழ்ந் திருந்ததாகக் கச்சிப்பதியை ஆழ்வார் சிறப்பித்தா ரெனல் சிறிதும் பொருந்துவதன்று. 10