உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாதுரை

11

கடவுள்கள் என்று கருதும் நமது பாமர மக்களின் ஏமாளித்தனத்தைப் பார்க்கும்போது நமக்குப் பரிதாபம் பிறக்கிறது.

இந்திரனுடைய இலட்சணந்தான் இப்படி என்று எண்ணி விடுவதற்கில்லை, ஆரியர்களின் பட்டியலிலே காணப்படும் வேறு தேவர்களின் குணாதிசயங்களும், இதற்கு இம்மியும் குறைந்ததாகக்கூறுவதற்கில்லை. ஒரு தேவனை மற்றோர் தேவன் தோற்கடிக்கிறான். எதில்? தூய்மையிலா? வாய்மையிலா? கடவுட் தன்மையிலா? நீதி நேர்மையிலா? தயை தர்மத்திலா? இல்லை இல்லை; காமாந்தகாரத்தில்.

வேத ஒலி நிறைந்ததும், நாரத கானமும் நல்லோரின் நாதமும் கமழுவதும், ஓமப்புகை சூழ்ந்திருப்பதும், இராஜ அம்சங்கள் அழகுற உலவும் தாமரைத் தடாகங்கள் நிரம்பியதும், மந்தமாருதம் வீசும் மாண்புடையதும், வேத ஒழுக்கமுற்றநல்லோர் சென்று அடையும் புண்ய பூமியாக இருப்பதுமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது பிரம்மலோகம். இங்குக் கொலுவீற்றிருக்கும் சிருஷ்டிகர்த்கா பிரம்மன். இவருடைய லீலைகளோ அனந்தம். சிருஷ்டி கர்த்தாவின் லீலைகளிலே மிகச் சிலாக்கியமானது, தானே சிருஷ்டித்த மங்கையைத்தானே மணம் செய்து கொண்டது. சரசுவதிக்குத்தந்தையும் பிரமனே; கணவனும் அவரே! மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம், என்ற தத்துவத்தைப் பிரம்மன் தனது காமத்துக்குத் துணை கொண்டார் போலும். சிருஷ்டி கர்த்தாவைப் பற்றிக் கதைகளைச் சிருஷ்டித்தவன். அவருக்குச் சீலத்தை, சாந்தத்தை, ஒழுக்கத்தைச் சூட்டியிருக்கக்-