உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

-: தமிழன் இதயம் தருணம் இதுவே பல்லவி தருணம் இதுவே. தருமம் இதுவே தமிழா ! எழுந்திரடா. அனுபல்லவி கருணையின் வடிவாம் கலைகளின் முடிவாம் 'காந்தி யென்றொருமுனி - சாந்தி 'யென் றழைக்கிறார். (தரு) சரணங்கள் வள்ளுவர் வாழ்க்கையும் திருக்குறள் வகுத்ததும் தள்ளரும் தாயுமானவருடல் தகித்ததும் வள்ளலி ராமலிங்க சுவாமிகள் வடித்ததும் கள்ளமில் பட்டினத்தார் கவலையும் இதற்கே. (தரு) சைவர்கள் பூண்டதும் சமணர்கள் மாண்டதும் வைணவர் வருத்தமும் புத்தர்கள் வாட்டமும் மைய ற ஏசுதான் சிலுவையில் மரித்ததும் மஹம்மது நபியவர் மகிழ்ந்ததும் இதற்கே. (தரு) கம்பன் கவித்திறமும் வில்லியின் சந்தமும் செம்பொருள் சேக்கிழார் தேடித் தெரிந்ததுவும் பைம்பரஞ் சோதியார் பாடிப் பகர்ந்ததுவும் நம்பின யாவரும் நவின்றதும் இதுவே. (தரு) 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/41&oldid=1449378" இலிருந்து மீள்விக்கப்பட்டது