உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பழைப்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பழைப்பு

7


-தும்; இங்குள்ள சில தேசீயத் தோழர்கள் துண்டு நோட்டீஸ் அடித்திருக்கிறார்கள்.

மிக மிகப் பலம் வாய்ந்தது தேசீய கவசம் என நினைத்திருந்தேன். ஆனால், இப்போது தெரிய வருகிறது அது எவ்வளவு சீக்கிரம் கலகலத்துப் போகிறது, படபடத்துக் கரைகிறது என்பது.

இந்த ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதால் ஓமத்தூரார், தனது பழைய கவசத்தைக் களைந்து விட்டு புதுக்கவசம் போட்டுக்கொண்டுவிடுவாரோ, என்று கலங்கிப் போயிருக்கின்றனர். அவர்கள், பரிதாபம். அந்தத் தோழர்கள் ஓமந்தூராரையும் புரிந்துகொள்ளவில்லை. தேசீயத்தையும் புரிந்து கொள்ளவில்லையே என அனுதாபப் படுகிறேன்.

இந்த மாநாட்டில் நான் பங்குகொள்வதால் ஓமந்தூரார் கட்சி மாறிவிடுவாரென்று கருதுமளவு பைத்தியக்காரனல்ல நான். திடீர்த்தோழர்களையோ கூடுவிட்டு கூடுபாய்பவர்களையோ, பார்த்திராதவனுமல்ல நான். பார்த்தவுடன் கட்சியிலிருக்கவேண்டும் என்று கருதுமளவுக்கு எனது கட்சியும் இல்லை. அத்தகையோர் இல்லாமல்தான் எங்கள் இயக்கம் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை மக்கள் அறிவர்.

எனது ஆசையெல்லாம் கருத்துக்கேற்றபடி காரியங்களைச் செய்யவேண்டும் என்பதுதான். எப்படியாவது நாட்டு நலிவு நீங்கவேண்டுமென்பதுதான்!

இன்று, இம்மாநாட்டைத் துவக்கிவைத்து அருமையான கருத்துரைகளைத் தந்த ஓமந்தூரார் அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/8&oldid=1661888" இலிருந்து மீள்விக்கப்பட்டது