உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பழைப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அண்ணாவின்


கிடந்தேன் இவ்வளவு டன் என்று எளிதாகப் புள்ளி விபரம் தருகிறோம். ஆனால் அந்தப் புள்ளி விபரம் பெற, விவசாயிகள் சிந்தியவியர்வை, கொட்டிய இரத்தம்!

அப்படிப்பட்ட மக்கள் நிரம்பிய கிராமங்களிலே பாதை பழுது, பள்ளி கிடையாது. வைத்தியவசதியில்லை. இவை மாறவேண்டாமா? மாறி கிராமம் — நகரம் என்ற வித்தியாசமே அற்றுப் போகவேண்டும். இதை மனதில் கொள்ளாமல், கிராமசேவைக்கு கிளம்புவது, பயன் தராது!

நாகரீக வசதிகள் கிராமத்திற்கும் பரவ வேண்டும். நல்ல ஆஸ்பத்திாி ஒழுங்கான பள்ளிக்கூடம், நல்ல பாதை ஆகியவைகளைப் போடவேண்டுமேயாெழிய 'நந்தனார் கீர்த்தனை'யை பாடிக் காட்டினால் போதாது. அதிலும் இந்தக் காலத்து நந்தன் சிதம்பரம் திரும்ப மாட்டான். ஒருவேளை மாஸ்கோவுக்குப் புறப்பட்டாலும் புறப்படலாம்!

ரஷ்யாவிலே கிராமத்துக்கும் நகரத்துக்கும் வித்தியாசம் அதிகம் இராதாம். காரணம் அவ்வளவு வசதிகளும் அங்கே உண்டாம். நான் படித்ததாக ஒரு ஞாபகம், புரட்சிவீரர் லெனின் மரணப்படுக்கையில் கிடக்கிறார். அவரைச் சுற்றி அவரது தோழர்கள் சோகமாக நின்று கொண்டிருக்கிறார்கள். சோகமாக தாேழர்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்ட லெனின், ஒருவரை அழைத்து ஏன் இப்படி வருத்தப்படுகிறீர்கள், என்றாராம். அதற்கு அத்தோழர், நமது வழிகாட்டியாகிய நீங்களாே மரணப்படுக்கையில் கிடக்கிறீா்கள். இனி, யார் இருக்கிறார்கள் ரஷ்யாவைக் காப்பாற்ற..." என்று அழுத வண்ணம் கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/27&oldid=1661872" இலிருந்து மீள்விக்கப்பட்டது