கலைக்களஞ்சியம்/அகில இந்தியக் கிராமக் கைத்தொழிற் சங்கம்
Appearance
அகில இந்தியக் கிராமக் கைத்தொழிற் சங்கம் என்பது இந்தியக் கைத்தொழில்களை வளர்ப்பதன் வாயிலாகக் கிராம மக்களுக்கு உதவி புரியும் பொருட்டுக் காந்தியடிகளால் 1934-ல் நிறுவப் பெற்றது. தலைமை அலுவலகம் வர்தாவைச் சார்ந்த மகன்வாடி.