உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அட்மிரல்

விக்கிமூலம் இலிருந்து

அட்மிரல் என்பது இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய இரண்டும் நீங்கலாக ஏனைய நாடுகளின் கப்பற்படைத் தலைமை அதிகாரியின் பதவியைக் குறிப்பதாகும். இங்கிலாந்திலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் கப்பற்படை அட்மிரல் என்பதே தலைமைப் பதவியாகும். எல்லா நாடுகளிலும் கப்பற்படை அட்மிரல்களுள் கீழிருந்து மேலாக முறையே ரீர் அட்மிரல், வைஸ் அட்மிரல், அட்மிரல் என மூன்று தரங்கள் உள்ளன. கப்பற்படையில் அட்மிரல் என்னும் பதவி தரைப்படையில் ஜெனரல் என்னும் பதவிக்கு ஒத்ததாகும்.

இந்தியாவிலும் இங்கிலாந்தில் போலவே நான்கு தரப் பதவிகள் உள்ளன. ரீர் அட்மிரல் பதவியைத் தவிர, மற்றப் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் இருந்து தீரவேண்டிய கட்டாயமில்லை.