கலைக்களஞ்சியம்/அட்லான்டிஸ்
Appearance
அட்லான்டிஸ் : ஜிப்ரால்டர் ஜலசந்திக்கு மேற்கே அட்லான்டிக் சமுத்திரத்தில் இருந்ததாகக் கிரேக்கர்களும் ரோமானியர்களும் நம்பிவந்த ஒரு பண்டைய புராணத் தீவு. அங்கே ஒரு பெரிய ஜனசமூகம் வாழ்ந்து வந்ததாகவும் அது தமது காலத்துக்கு எண்பதாயிரம் ஆண்டுகட்குமுன் சமுத்திரத்தில் ஆழ்ந்து விட்டதாகவும் அவர்கள் கூறினார்கள். அது இப்போதுள்ள கனாரித் தீவு என்று சிலரும், அமெரிக்கா என்று சிலரும், ஸ்காந்தினேவியா என்று சிலரும் கூறுகிறார்கள். ஆட்லெஸ் மலையை வைத்தே அட்லான்டிக் சமுத்திரமும் அட்லான்டிஸ் தீவும் பெயர் பெற்றன.