கலைக்களஞ்சியம்/அப்ரடைட்டி
Appearance
அப்ரடைட்டி (Aphrodite) கிரேக்கக் காதல் தேவதை ; கடல் நுரையில் பிறந்ததால் இந்தப் பெயர் பெற்றாள். இவளை ரோமானியர் வீனஸ் என்பர். இவளுடைய ஒட்டியாணத்தை அணிபவர் காதலிக்கப் படுவர். ரோம மன்னன் ஹேட்ரியன் இவளுக்குக் கோவில் எடுத்தான். சிறந்த சிற்பிகள் இவளுக்குச் சிலை பல செய்துளர். அவற்றில் பாரிஸில் லூவர் பொருட்காட்சி யிலுள்ளது உலகப் புகழ் வாய்ந்தது.