சங்க நூல்களால் பண்டைக் காலத்திற் சி. ப்புற்று விளங்கிய நகரங்களின் வரலாறுகள் நன்கு புலப்படு கின் றன. இவ்வாறு புலப்படும் இரண்டு நகர வரலாறுகள் 13, 14-ம் கட்டுரைகளில் அமைந்துள்ளன. சங்கச் செய்யுளென்று இதுவரை பெரும்பாலாரும் கருதிவந்துள்ள நூல்களுள் ' முத்தொள்ளாயிரம்' என் பது ஒன்று. இந்நூல் இலக்கியச் சுவையில் சிறந்து மேம்பட்டு விளங்குவது, இந்நூலைக் குறித்தும் இதன் காலத்தைக் குறித்தும் இறுதிக் கட்டுரைகள் இரண்டும் விளக்குகின்றன. இக்கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைகளின் ஆசிரி யர்களுக்கு எனது நன்றி உரித்தாகும், கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் என்னோடு ஒத்துழைத்தும், சென்னையிலிருந்து அச்சுத் தாள்களைத் திருத்தியும் பிறவாறும் துணைபுரிந்தவர் சென்னை ஆர்ட்ஸ் காலேஜ் தமிழாசிரியர் திரு. வித்துவான் M. சண்முகம் பிள்ளை யாவர். இங்கே திருவனந்தபுரத்தில் எனக்கு உதவிபுரிந்து வந்தவர் திருவனந்தபுரம் யூனிவர் ஸிட்டி காலேஜ் தமிழாசிரியர் திரு. R. வீரபத்திரன், M.A., L'I', ஆவர். இவ்விருவருக்கும் எனது ஆசி. இந்நூலை அழகிய முறையில் அச்சியற்றி வெளியிட்ட பாரி நிலையத்தாருக்கு எனது நன்றி. நான் எழுதிய பிற கட்டுரைகளும் தொகுதி தொகுதி யாக விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன், இம் முயற்சிகளில் என்னை ஊக்குவித்துவரும் தமிழ்த் தெய் வத்தை மனமொழி மெய்களால் வணங்குகிறேன். திருவனந்தபுரம் ) ஸர்வகலாசாலை , எஸ். வையாபுரிப் பிள்ளை 25-10-52 )
பக்கம்:இலக்கிய தீபம்.pdf/7
Appearance