கலைக்களஞ்சியம்/அன்னபேதி
Appearance
அன்னபேதி (குறியீடு Fe SO4, 7H2O) படிகவடிவுள்ள அயச சல்பேட்டு என்ற ரசாயனப் பொருள் இப்பெயருடன் இந்திய மருத்துவத்தில் தொன்றுதொட்டு வழங்கி வருகிறது. இது இலேசான பச்சை நிறமும், துவர்ப்பான சுவையும் உடையது. காற்றிலுள்ள ஈரத்தை உறிஞ்சி, இது ஒருவகைப் பழுப்பு நிறமாக மாறும். இரும்புக் கந்தகக் கல்லை ஆக்சீகரணித்து இது தயாரிக்கப்படுகிறது. கறுப்பு மையைத் தயாரிக்கவும், தோல் பதனிடுதலிலும் இது பயனாகிறது. இது மருந்துகளிலும், தொற்று நீக்கியாகவும், சாயங்களிலும் பயனாவதுண்டு. குடிதண்ணீரைச் சுத்தம் செய்ய இதைச் சேர்ப்பதுண்டு.