கலைக்களஞ்சியம்/ஆட்டிக்கா
Appearance
ஆட்டிக்கா (Attica) : ஈஜியன் கடலுக்குள் முக்கோண வடிவமாகச் செல்லும் தீபகற்பம். பண்டை அதீனியர்கள் வாழ்ந்த நிலம். கி. மு. 8ஆம் நூற்றாண்டு முதல் ஆதன்ஸ் அதன் தலைநகரம். இங்குத்தான் கிரீசின் பண்பாடு சிறந்து விளங்கியதாகும். இங்குள்ள பார்தினன் கோயில் வெண்சலவைக் கல்லாலாயது. வரலாற்றுப் புகழ் பெற்றது. கடற்கரையில் துறைமுகங்கள் இருந்து கப்பல் வியாபாரத்துக்குத் துணை செய்தன. மலைகளில் இரும்பும் ஈயமும் வெள்ளியும் கிடைத்தன. இப்போது ஆட்டிக்கா கிரீசின் ஒரு பகுதியாக இருந்துவருகிறது.