கலைக்களஞ்சியம்/ஆதொண்டை
ஆதொண்டை முள்ளுள்ள கொடி. இந்தியா, இலங்கை, பர்மா முதலிய தேசங்களில் வளர்வது. வேலிகளிலும் தனிமரங்களின் மீதும் படர்ந்திருக்கும். பூத்திருக்கும்போது மிகவும் அழகாகத் தோன்றும். இலை தனியிலை; இலையடிச் செதில் முள்ளாக மாறி இருக்கும். இளம் பாகங்களைத் துருப்போன்ற நிறமுள்ள நுண் மயிர் மூடியிருக்கும். புறவிதழ் 4; அகவிதழ் 4. கேசரம் பல. சூலகம் சூல்காம்பின் முனையிலிருக்கும். கனி சற்று நீண்டு உருண்டிருக்கும். விதைகள் மிகப்பல. சுவர் ஒட்டு முறையில் அமைந்திருக்கும். காயை வற்றல்
போடுவார்கள். இலையை, வீக்கம், கட்டி, மூலவியாதி முதலியவற்றிற்கு வைத்துக் கட்டுவதுண்டு. வேரின் பட்டை கசப்பானது. உபசமன மருந்தாகவும், அரோ சிக நிவிர்த்தி மருந்தாகவும் பயன்படுகிறது. வாந்தி பேதிக்கும் வேர்ப்பட்டை பயன்படுகிறது. குடும்பம்: கப்பாரிடேசீ ; இனம்: கப்பாரிஸ் சைலானிகா (Capparis zeylanica).