உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆழ்வார்திருநகரி

விக்கிமூலம் இலிருந்து

ஆழ்வார்திருநகரி தென்கரை என்றும் பெயர் பெறும். அதன் காரணம் ஊர் தாமிரபருணி ஆற்றின் தென்கரையிலிருப்பதேயாம். பாளையங்கோட்டையிலிருந்து திருச்செந்தூர் போகும் சாலையில் உள்ளது. இங்குள்ள கோவில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெரிய கோவில்களுள் ஒன்றாகும். கோவிலின் இடது பக்க மண்டபத்தில் ஒரே கல்லில் 48 மெல்லிய தூண்களைச் செதுக்கிய பெருந்தூண்கள் உள. நம்மாழ்வார். தோன்றிய ஊர். அவர் பிறப்பதற்குமுன் திருநகரி என்பதே ஊரின் பெயர். இங்கு நடைபெறும் வைகாசித் திருவிழா மிகப்பெரியது. அப்பொழுது மாட்டுச் சந்தையும் நடைபெறும். மக். 6.654 (1951).