உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இணைதல்மானி

விக்கிமூலம் இலிருந்து

இணைதல்மானி (Interferometer) : ஓர் ஒளிக்கதிரை இரண்டு அல்லது பல பகுதிகளாகப் பிரித்து, அப் பகுதிகளை மீண்டும் ஒன்று சேர்த்து, அவற்றினிடையே இணைதல் விளைவுகள் (த. க ) நிகழச் செய்யும் அமைப்பு இணைதல்மானி எனப்படும். சிறு தொலைவுகளையும், அலைநீளத்தில் தோன்றும் மிகச் சிறு வேறுபாடுகளையும், பொருள்களின் ஒளிக்கோட்ட எண்களையும் அளவிட இவ்வமைப்பைப் பயனாக்கலாம்.

இணைதல்மானியில் பல வடிவங்கள் உண்டு. அவற்றுள் மிக்கல்சன் என்னும் விஞ்ஞானி அமைத்தது புகழ்பெற்றது. ஒளிக்கதிர் செல்லும் வகை படத்திலிருந்து விளங்கும். S என்ற தோற்றுவாயிலிருந்து புறப்படும் ஒளிக்கதிரானது P1 என்ற கண்ணாடித் தட்டையடைந்து அங்கு இரு பகுதிகளாகப் பிரிகிறது. ஒரு பகுதி தட்டின் வழியே சென்று, M1 என்ற சமதள

இணைதல்மானி
உதவி: சென்கோ, சிக்காகோ

ஆடியை அடைந்து, வந்த திசையிலேயே திரும்பிச் செல்கிறது. இப்போது அது P1-ல் பிரதிபலித்து, E என்ற இடத்திலுள்ள கண்ணை அடைகிறது. P1-ல் பிரியும் ஒளிக்கதிரின் மற்றப்பகுதி அத் தட்டில் பிரதிபலித்து, M2 என்ற சமதள ஆடியை அடைந்து, அதிலிருந்து பிரதிபலித்து, வந்த வழியே திரும்பி, P1-ன் வழியே சென்று E-ஐ அடைகிறது. படத்தில், கிடையாகச் சென்று மீளும் பகுதி P1-ன் வழியே மும்முறை செல்கிறது. ஆனால் நேர்குத்தாகச் செல்லும் பகுதியோ P1 -ஐ ஒரு முறைதான் கடக்கிறது. இதை ஈடு செய்வதற்காக

இணைதல் மானியில் ஒளிகதிர் செல்லும் வகை

P1 ச்குச் சமமான தடிப்புள்ள P2. என்ற தட்டு இதன் பாதையில் வைக்கப்படுகிறது. இப்போது ஒளிக்கதிர் இதை இருமுறை கடக்கும். ஆகையால் ஒளிக்கதிரின் இரு பகுதிகளும் E-ஐ அடையும்போது அவற்றின் பாதைகளின் வேற்றுமையானது M1, M2, என்ற ஆடிகளின் தொலைவுகளைப் பொறுத்திருக்கும். ஒளிக்கதிர்ப் பகுதிகள் இரண்டும் E-ஐ அடைந்து, பாதை வேற்றுமைக்கேற்ற இணைதல் விளைவுகளைத் தோற்றுவிக்கும். M2, என்னும் ஆடியின் தொலைவை ஒரு திருகின் உதவியால் மாற்றலாம். இந்த மாற்றத்தைத் திருத்தமாக ஒரு மைக்ரோமீட்டரால் அளவிடலாம். M2- ன் தொலைவு மாறும்போது E-ல் தோன்றும் இணைதலில் நிகழும் மாறுதல்களை அளவிட்டு, ஒளியின் அலை நீளத்தையும் மற்ற விவரங்களையும் அறிய லாம். இணைதல்மானிகள் பல வகைகளில் பௌதிக ஆராய்ச்சியில் பயனாகின்றன. ஒளிக் கதிர்ப் பகுதிகளில் ஒன்றன் பாதையில் மட்டும் ஒரு பொருளை வைத்துப் பாதை வேற்றுமையை விளைவித்து, இணைதல் மாறுதல்களை அளவிட்டுப் பொருளின் ஒளிக்கோட்ட எண்ணை அளவிடலாம். மிக நெருக்கமாக உள்ள நிறமாலைவரைகளைப் (பார்க்க: நிறமாலையியல்) பிரித்தறியவும் இக் கருவி பயனாகிறது. குறிப்பிட்டதொரு ஒளியைத் திட்டமாகக் கொண்டு, அதன் அலைநீளத்தைத் திருத்தமாக அளவிட்டு, நீள அலகை அளவு திருத்தவும், சிறு தொலைவுகளையெல்லாம் மெல்லிய பொருள்களின் தடிப்புக்களையும் திருத்தமாக அளவிடவும் இக் கருவி பயன்படுக்கிறது கிறது.

வானவியலாராய்ச்சியில் இணைதல்மானி மிகப் பயனுள்ள சாதனமாகும். இரட்டை நட்சத்திரங்களை ஆராயவும், பெரிய நட்சத்திரங்களின் விட்டத்தை அளவிடவும் இது உதவுகிறது.