உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 மாவீரன் மயிலப்பன் - -

10. சம்பிரிதி :

சேதுபதி சீமையில் பணிபுரியும் நிர்வாக அலுவலரதுபெயர் பெரும்பாலும் பல கிராமங்களின் தொகுப்பான நிர்வாகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் என்ற பணிக்கு இணையானது. இது ஒரு வடமொழிச் சொல்லாகும்

11. சுணக்கம்

காலங்கடந்து செயல்படுவதை தாமதம்என இப்பொழுது

பயன்படுத்திவருகிறோம். ஆனால் இதற்கு நேரான நல்ல தமிழ்ச்சொல் சுணக்கம்

என்பது ஆகும். இதன் வினைத் தொகை சுணங்குதல் ஆகும்.

12. சேகரம் பட்டறை :

இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது ஆட்சியின் பொழுது, அரசு இறையாகக் குடிமக்களிடமிருந்து, பெறப்பட்ட தானியங்களை சேமித்து வைப்பதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்ட, தானியங்களஞ்சியம் ஆகும். இது பெரும்பாலும் வைக்கோலினால் முரட்டுக்கயிராகதிரிக்கப்பட்ட நீண்ட கயிற்றை வட்டவடிவில் ஒன்றின்மேல ஒன்றாக ஒரே மாதிரியாக அடுக்கப்பட்டு அதன் நடுப்பகுதியில் தானியங்களைக் கொட்டிச்சேமித்து வைக்கும் பட்டறைகளுக்கு இந்த பெயர் வழங்கப்பட்டது.

நடப்பு :

அன்றாட நடைமுறையை குறிக்கும் சொல்.

13. நிலம் தெளியும் நேரம் :

நாள் தோறும், கீழ்த்திசையில் ஆதவன்எழுவதற்கு முன்னர் ஏற்படும் ஒளிக் கலவையில் உலகை பற்றியிருந்த கார் இருள் விலகி அனைத்துப் பொருள்களையும், இனம் காணவும், நிலத்தில் உள்ளவைகளையும், உணரும் வகையில் ஏற்படும் வெளிச்சத்தை நிலம் தெளியும் காலமாக சேது நாட்டினர் குறிப்பிடுகின்றனர்.

14.பக்கோடா:

நமது நாட்டை ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியார் அடிமைப்படுத்தி

அவர்களது நாடாக மாற்றிய பிறகு, அங்கே மக்களிடையே செலாவணியில்

இருந்து வந்த முந்தைய மன்னர்களது ஆட்சியின் பொழுது இருந்த நாணயங்கள்