100—
=மறவர் சீமை
தூக்கணாங்குருவி கூடுபோல பரிதாபமாக காட்சியளித்தது அந்த கோட்டை. கொலைகாரன் அக்கினியூவின் திட்டம் நிறைவேறியது. வேறு வழியில்லாமல் ஊமைத்துரையும் அவரது நிழல்போன்ற வீரர்களும் தங்களது தற்காப்புப்போர் உத்திகளை மாற்றி, நேருக்கு நேர் கோட்டையின்முன் அணிவகுத்து வியூகம் அமைத்து நேரடியாகச் சாடினர். புறநானூற்றுப்பாடல்களின் இலக்கியமாக இறுதிவரை வீரத்துடன் போராடிப் புனித மண்ணில் சாய்ந்தனர். பொன்றாத புகழுடம்பு பெற்றனர். ஏகாதிபத்திய கொலைக்காரர்களது வெடிகுண்டுகள் புதைந்து தங்களது தாயகத்தின் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, அவைகளைத் தங்களது இதயங்களில் தாங்கியவாறு தளர்ந்து ஒடிந்து விழுந்து மாண்டனர். பாஞ்சைக் கோட்டையின் வரலாற்று நாயகன் ஊமைத்துரை, கும்பெனியாரை நேருக்குநேர் பொருதிப் போரிட்டதில் உடல் முழுவதும் பெற்ற மரண காயங்களுடன் தரையில் சாய்ந்தார். நாட்டு விடுதலைக்கு இதற்குமேல் அவர்களால் என்ன செய்ய இயலும்?
கம்பளத்து நாயக்கர்களது தலைவரான கட்டபொம்மு நாயக்கர்களது தலைமையிடமாக விளங்கிய பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டை 24.5.1801ம் தேதி வீழ்ந்தது." இராமநாதபுரம், சிவகெங்கைச் சீமை மறவர்களது உழைப்பும், உயிர்த் தியாகமும் நிறைந்த பாஞ்சாலங்குறிச்சிப் போர் இந்திய விடுதலை இயக்கத்தின் வெற்றிச் சிகரங்களில் ஒன்றாக விளங்கும், என்பதில் ஐயமில்லை. ஏகாதிபத்திய வெறியர்களது அசுரத் தாக்குதலைத் தொடர்ந்து நான்கு மாதங்கள் சமாளித்த வீரப்போர் இந்தியத் துணைக் கண்டத்தில் பாஞ்சாலங்குறிச்சியைத் தவிர வேறு எங்கும் நடைபெறவே இல்லை என்பது நமது வரலாறு சுட்டும் உண்மையாகும்.
இந்தப் போரில் ஈடுபட்ட கும்பெனித் தளபதிகளில் ஒருவரான வெல்ஷ் வரைந்துள்ள நாட்குறிப்புகளில் இந்தக் கோட்டையின் அற்புத அமைப்பை பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்."
66. Dr.K. Rajayyan - History of Madurai 1972. 67. Col. Welsh - Military Reminiscences 1830 vol 1 page 132-133.