உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க இலக்கியத் தாவரங்கள்/098-150

விக்கிமூலம் இலிருந்து

மரமல்லிகை
மில்லிங்டோனியா ஹார்ட்டென்சிஸ்
(Millingtonia hortensis)

இது மல்லிகை இனத்தைச் சார்ந்ததன்று. எனினும், மர மல்லிகை என்ற பெயர் கொண்டு உள்ளமையின் இதனைப் பற்றிய தாவரவியல் விளக்கக் குறிப்புகள் வேண்டப்படும். இது கார்மல்லி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சங்க இலக்கியத்தில் காணப்படாத தாவரம்.

மர மல்லிகை தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : பிக்னோனியேசி (Bignoniaceae)
தாவரப் பேரினப் பெயர் : மில்லிங்டோனியா (Millingtonia)
தாவரச்சிற்றினப்பெயர் : ஹார்ட்டென்சிஸ் (hortensis)
உலக வழக்குப் பெயர் : மர மல்லிகை, காட்டு மல்லிகை
இயல்பு : மரம்
வளரியல்பு : மீசோபைட்
உயரம் : 10-15 மீட்டர்
வேர்த் தொகுதி : பக்க வேர்கள் பலவாகக் கிளைத்துப் பருத்து நீண்டு வளரும். வேர்களிலிருந்து இம்மரம் தானாக வளரும்.
தண்டுத் தொகுதி : நேரான உயரமான மரம். தக்கை போன்ற பட்டை உடையது.
கிளைத்தல் : 3-4 மீட்டர் உயரத்திற்கு மேல் சிறு கிளைகள் காணப்படும்.
இலை : பெரிய கூட்டிலை. 2-3 சிறகமைப்பானது. எதிரடுக்கு 60 முதல் 80 செ. மீ. நீளமானது.
சிற்றிலை வடிவம் : ஈட்டி முனை போன்றது.
விளிம்பு : அரை வட்டப் பற்களை உடையது.
நுனி : நீண்டு கூரியது.
பரப்பு : பசியது, பளபளப்பானது.
காம்பு : மிகச் சிறியது. நுனி இலை காம்பு இல்லாதது போல் இருக்கும்.
மஞ்சரி : ‘காரிம்போஸ் பானிக்கிள்’ என்ற கலப்பு மஞ்சரி. 20-25 செ. மீ. நீளமும், 10-15 செ.மீ. அகலமும், 5-8 செ. மீ, நீளமானது.
மலர் : மலரடிச் செதில் தோற்றமில்லாதது. நீளமான 5 அடுக்கான, வெண்மையான, மணமுள்ள பல மலர்கள் உண்டாகும்.
புல்லி வட்டம் : புல்லிகள் மிகச் சிறியவை. 5 பற்கள் போன்றவை. 1-2 மி. மீ. நீளம்.
அல்லி வட்டம் : 5 இதழ்கள் அடியில் இணைந்து, நீண்ட குழல் வடிவானது. குழல் 5 முதல் 7 செ. மீ. நீளமானது. மேலே 5 அகவிதழ்கள். மடல் 2-2.5 செ.மீ. அகன்று, விரிந்தது. மடல்கள் சமமில்லாதன. தெளிவற்ற இரு உதடுகள் போன்றன.
மகரந்த வட்டம் : 4 மகரந்தத் தாள்கள். இவற்றுள் 2 நீளமானவை. அல்லிக் குழலுக்கு மேலே, சற்று வெளியேறித் தெரியும்.
மகரந்தப் பைகள் : ஓர் அறை கொண்டவை.
சூலக வட்டம் : சூற்பை சற்றே காம்புடையது. உருளை போன்ற கூம்பு வடிவமானது.

சூல்கள்

||: ||ஒன்று முதல் பல வரிசைகளில் அமைந்திருக்கும்.

மரமல்லிகை
(Millingtonia hortersis)

சூல் தண்டு 

||: ||நீளமானது, மென்மையானது

சூல்முடி

||: ||2 மடலானது
கனி : நீண்ட, மெலிந்த காப்சூல், தடுப்புச் சுவருக்கு இணையாக அமுங்கி இருக்கும். தடுப்புச் சுவர் வெடி கனி. 2 வால்வுகள் மிகப் பல விதைகளை உடையது.
விதை : பல தட்டையாகவும், அகன்ற கண்ணாடி போன்ற இறகு கொண்டும் காணப்படும்.