உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறவர்சீமை மாவீரன் மயிலப்பன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

월- மறவர் சீமை

வலது, இடது புறங்களில் முன்னேறிக் கிளர்ச்சிக்காரர்களைப் பக்கவாட்டில் நெருங்கித் தாக்கவேண்டும். அவர்களது இந்தத் திட்டம் நூற்றுக்கு நூறு வெற்றியளித்திலி: கிளர்ச்சிக்காரர்களுக்கு மிகுந்த சேதம். வேறு வழியில்லாமல் அவர்கள் கிழக்கு நோக்கி பின் வாங்கினர். என்றாலும் கும்பெனியாரின் "மறவர் அணி" அபிராமத்திலும் முதுகுளத்துாரிலும் நிலை கொண்டது. தளபதி டிக்பர்ன் கமுதிக் கோட்டைக்குத் திரும்பினார்.