உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 இலக்கிய தீபம் இயற்றியவரல்லர் என்பது உரையின் நடையை நோக்கிய அளவிற் புலனாம். ஆனால் ஏட்டுப்பிரதி 994-ம் ஆண்டு கார்த்திகை மாதம் 30-ம் தேதி எழுதப்பெற்றது. எனவே இற்றைக்கு 136 வருஷங்களுக்கு முன் பிரதிசெய்ததாகும். எப்பொழுது இவ்வுரை வகுக்கப் பெற்றது என்பது அறியக் கூடவில்லை. இவ்வுரையும் நச்சினார்க்கினியர் உரையும் பெரிதும் ஒத்துச் செல்கின்றன. 'வசிந்துவாங்கு நிமிர் தோள்' (106-ம் அடி) என்றதன் உரையில் வளையவேண்டு மிடம் வளைந்து நிமிரவேண்டுமிடம் நிமிரும் தோளென்றும் உரைப்பர்' என நச்சினார்க்கினியர் தமக்கு முற்பட்ட உரை காரர் ஒருவரைக் குறிப்பிடுகின்றார். 'உரையாசிரியர் உரையில் இப்பொருளே காணப்படுகிறபடியால், இவ்வுரை நச்சினார்க்கினியர்க்குமுந்தியது எனக்கொள்ளுதல் அமையும். உத்தேசமாக கி.பி. 14-ம் நூற்றாண்டில் இவ்வுரை எழுதப் பெற்றதாகலாம். இது ஒரு சிறந்த பழையவுரையாகும். யாவரும் அறி யக்கூடியபடி மிகவும் எளிமையான நடையில் எழுதப்பெற் றிருக்கிறது. மாட்டு முதலிய இலக்கணத்தால் அடிகளைச் சிதைத்து அலைத்துப் பொருள் பண்ணாதபடி சொற்கிடக்கை முறையிலேயே பெரும்பாலும் பொருள்கொள்ளப்பட்டிருக் கிறது. ஆற்றுப்படையைக் கற்போர்க்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இவ்வுரையால் இதுகாறும் கருகலா யிருந்த ஓர் அரிய தொடருக்கு இப்போது பொருள் விளங்கு கிறது. 216-ம் அடியிலுள்ள 'தலைத்தந்து என்பதற்கு 'முதற்கை கொடுத்து' என நச்சினார்க்கினியர் எழுதினர். புறநானூறு 21-ம் செய்யுளில் 'தலைக்கை தரூஉந்து' என்ப தற்கு அதன் பழையவுரைகாரர் 'முதற்கை கொடுக்கும் என்றெழுதினர். 73-ம் கலியுள் 'துணங்கையுட் டலைக் கொள்ள' என்பதற்குத் துணங்கைக் கூத்திடத்தே......... "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/51&oldid=1481529" இலிருந்து மீள்விக்கப்பட்டது