________________
நெடுநல்வாடையும் நக்கீரரும் 67 இவரது பெருமையை இறைவன் இயற்றிய செய்யுளிற் பிழை கண்ட வழியும் குற்றம் குற்றமேயென்று சாதித்து, யின் இறைவன் பெருமையை யுணர்ந்து அடியராயினாரென்று வரும் கதை நன்கு விளக்குகின்றது. இக்கதைதான் இவரது அழிவில்லாப் பெரும் புகழுக்கு அறிகுறியாக நின்று நிலவு கின்றது. நெடுநல்வாடையின் ஆசிரியரது புகழினை எடுத் துப்பேசி முடிக்குந் திறம் அரிய தொன்றாம். ஆதலின், இம்மட்டோடு நிறுத்துகின்றேன். இக்கட்டுரையின்கண்ணே, பாட்டுடைத் தலைவன் சிறப் யும், அவன் இருந்து அரசியற்றிய காலமும், நக்கீரனார் இச் செய்யுளை இயற்றிய காலமும், செய்யுளின் தலைக்குறிப்பின் பொருளும்,அழகும், நூலிற் பொதிந்த பொருளும், செய்யு ளின் நலங் கூறுமுகத்தால் பண்டைக்காலச் செய்யுட்கும் பிற்பட்ட காலத்துச் செய்யுட்கும் உள்ள வேறுபாடுகளும், நூலியற்றிய காலத்து வழக்க வொழுக்கமும் நாகரிகமும் ஒருவாறு ஆராய்ச்சி செய்யப்பட்டன. பின், நச்சினார்க் கினியர் உரைத்திறமும் நக்கீரரது சரித்திரமும் பெருமையும் குறிப்பிக்கப்பட்டன.