உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6. தொகை நூல்களின் காலமுறை தமிழிலுள்ள நூல்களுள் மிகப் பழைமையானவை தொகை நூல்கள் எனப்படும். இவற்றுள் அடங்கியவை எட்டு நூல்களாம். இவை இன்னவென்பது நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை என்ற வெண்பாவினால் அறியலாம். ஒவ்வொரு தொகை நூலும் ஓர் அரசரது ஆணையின்படி ஒரு புலவரால் தொகுக் கப்பட்டதாகும். பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு என்ற மூன்று நூல்களும் முற்றும் அகப்படாமையினாலே, இவை தொகுக்கப்பெற்ற விவரங்கள் அறியக்கூடவில்லை. கலித்தொகை முற்றும் அகப்பட்டுள்ள தெனினும், அதனைத் தொகுத்தாரும் நெய்தற்கலியை இயற்றினாரும் நல்லந்துவனார் என்னும் ஒரு செய்தியன்றி வேறொன்றும் தெரியமாட்டாது. இத்தொகை பற்றிப் பின்னர் நோக்குவோம். அகநானூறு, ஐங்குறுநூறு,குறுந்தொகை, நற்றிணை என்ற நான்கு நூல் களையும் குறித்துச் சில விவரங்கள் அவற்றின் இறுதியிற் காணப்படுகின்றன. கீழ்க்கண்ட நூல்களுள், ஐங்குறுநூறு தவிர ஏனைய மூன்றும் அடிகளின் எண்முறை பற்றித் தொகுக்கப்பட் டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/80&oldid=1481682" இலிருந்து மீள்விக்கப்பட்டது