________________
குறுந்தொகை வான்றோய் வற்றே காமம்; சான்றோ ரல்லர்யாம் மரீஇ யோரே கூ 99 (குறுந்.102) காதலென்னுங் கடுந்தீயின் பொறுக்கலாற்றாமையை இத் துணை வேகத்தோடு கூறுகின்றவர் ஒளவையாரே. இவ் இருவரும் வேறுவேறு காலத்தினராதல் வெளிப்படை. வேகுேம் உதாரணம் புறநானூற்றினின் அம் தருகின்றேன். மோசி பாடிய ஆயும். எனவாங்கு எழுவர் மாய்ந்த பின்றை அழிவரப் பாடி வருநரும் பிறருங் கூடி இரந்தோரற்றந் தீர்க்கென (புறம்,158) என்று குமணனென்னும் வள்ளலைப் பெருஞ்சித்திரனாரென் னும் புலவர் பாடினர். இங்குக் குறித்த மோசியார் பாடிய செய்யுட்கள் பல புறநா னூற்றின்கண்ணேயே வருகின்றன. அவற்று ளொன்று கீழ் வருவது : இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வணிக னாஅ யல்லன் ; சான்றோர் சென்ற நெறியென ஆங்குப்பட் டன்றவன் கைவண் மையே (புறம்.134) இவ் இருவரும் வேறுவேறு காலத்தினர் : எனினும் ஒரு தொகை நூலின்கண்ணே இருவரது செய்யுட்களும் தொகுக் கப்பட்டுள்ளன. மேற்காட்டியன போன்று பல உதாரணங்கள் காட்டு தல் கூடும். எனவே, சமகாலத்தினரது செய்யுட்களைத் தொகுத்த தொகைகளல்ல சங்க இலக்கியங்கள். உண்மை இவ்வாறிருப்பவும், காலவரையறை செய்யப் புகுந்தார் ஒரு சிலர், தொகுத்த காலமும் இயற்றிய காலமும் ஒன்றெனக் கொண்டு, பெரிதும் மயக்கத்தை விளைவித்தனர். புறநா தூந்து முதற்படுப்பின் முகவுரையில், ' இச்சற் செய்யுட்