உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

9. 'எருமணம்' குறுத்தொகைச் செய்யுளொன்றின் பொருள் ' குறுந்தொகை என்பது சங்க இலக்கியம் என வழங்கப் படும் தொகை நூல்களுள் ஒன்று இசன் செய்புட் சிறப்பை நோக்கி, 'நல்ல குறுந்தொகை' என ஒரு பழம்பாடல் இதனைக் குறிக்கிறது. பண்டைத் தமிழ் நூல்களுக்கு உரை வெழுதிய உரைகாரர்கள் பலரும் இந்நூலினை மிகவும் பாராட்டி அங்கங்கே இதினின்றும் மேற்கோள் காட்டி யிருக்கிறார்கள். இந்நூலின் 380 செய்யுட்களுக்குப் பேராசிரியர் உரை யெழுதினர் என்றும், அவர் எழுதாதுவிட்ட இருபது செய் யுட்களுக்கும் கச்சினார்க்கினியர் உணர வகுத்துள்ளார் என்றும் தெரிகிறது. இவ்வுரை இதுகாறும் அகப்படவில்லை. இதனையிழந்தது நம்மவர்களுடைய துர்ப்பாக்கியம் என்றே சொல்லவேண்டும். எ குறுந்தொகையை முதன் முதலாக வெளியிட்ட தமி முறிஞர் சௌரிப் பெருமானாங்கன் என்பலர். இவர் இப் பழையவுரை யில்லாக் குறையைக் கருதி, புதிய உரை யொன்று இயற்றினர். இதன் பின்பு திரு. இராமரத்த ஐயர் கலாநிலையத்தில் ஒர் உரையெழுதி வெளியிட்டனர். இவ் விரண்டு உரைகளும் செவ்விய உரைகள் எனக் கூற இய லாது. இவ்வுரைகள் மேற்கொண்டுள்ள பாடங்களும் திருத்தமான பாடங்களல்ல. பல சுவடிகளை ஒப்பு நோக்கித் திருத்தமான பாடங் களைக் கண்டு, நூதனமாக ஓர் உரையெழுதி 1937-ல் மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் வெளியிட்டார்கள். இப்பதிப்பே இதுவரை வெளிவந்துள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/126&oldid=1481726" இலிருந்து மீள்விக்கப்பட்டது