பக்கம்:சீவகன் கதை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அறமும் துறவும் 133 அவ்வருக தேவனுக்குச் சிறப்புக்கள் பல செய்தான். பல ஊர்களை அக்கோட்டத்திற்கு இறையிலியாகக் கொடுத்தான்; உலகம் வாழ அருகனைப் போற்றினான்; போற்றித் தன் பொற்பார் சுற்றத்தோடு தன் உரிமைக் கோயிலுள் புகுந்தான். நன்றி காட்டினான்: VII அறமும் துறவும் அரசு ஏற்ற சீவகன் தன் அத்தாணி மண்டபத்தே அமைச்சருடன் சிறக்க வீற்றிருந்தான்; கடந்த கால நிகழ்ச்சிகளையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைத் தான்; தன்னை அந்த அரச வாழ்வுக்குக் கொண்டு வந்த வர்களையெல்லாம் முறையே எண்ணினான். ஊரும் பேரும் தெரியாது சுடலையில் கிடந்த தன்னை எடுத்துத் தாலாட்டி வளர்த்த கந்துக்கடன் அவன் கண் முன் வந்து நின்றான்; கந்துக்கடன் அரச குலத்தவன் அல்லனாயினும், தன்னைப் போற்றி வளர்த்த தன்மையாளன் ஆனமையின், அவனுக்கு அரச உரிமையை நல்கினான்; பாலூட்டிச் சீராட்டி வளர்த்த சுனந்தைக்கு 'அரசமாதேவி' என்னும் பட்டத்தையும் கொடுத்து, இருவரையும் தன் னுடனே இருத்திக்கொண்டான். பின்னர் ஒருவர் பின் ஒருவராகப் பலர் அவன் மனக்கண் முன் நின்றனர். சீவகன் தம்பி நந்தட்டனை இளவரசனாக்கினான்; நபுல விபுலர்க்குக் குறுநில மன்னர் மகளிரை மணம் செய்து கொடுத்து, அவர்களுக்கும் நாடும் ஊரும் நல்கினான்; தன்னுடன் நீங்காது உறைந்து நின்ற காதற்றோழர் அனைவரையும் அழைத்துப் பட்டமும் பதவியும் கொடுத்துச் சிறப்பிக்கப்பெறும் -சனாதி மோதி 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/134&oldid=1484553" இலிருந்து மீள்விக்கப்பட்டது