உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - செய்ந்நன்றியறிதல்

97


"The kindly aids extent is of its worth no measure true. Its worth is as the worth of him to whom the act you do." - G.U.P. "The benefit itself is not the measure of the benefit, the worth of those who have received it is the measure." - W.H.D. "Help has no measure of its own. Its worth is as much as the worth of the recipient." - M.S.P.

106.மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துட் டுப்பாயார் நட்பு.

(இ-ரை.) துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை விடாதிருக்க; மாசு அற்றார் கேண்மை மறவற்க - மனத்திற் குற்றமற்றவரது உறவை மறவாதிருக்க.

மாசற்றார் கேண்மை இம்மைக்கும் மறுமைக்கும் பலவகையில் உதவும் என்பது கருத்து.

107.எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

(இ-ரை.) தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தங்கட்கு நேர்ந்த துன்பத்தை நீக்கினவருடைய நட்பை; எழுமை யெழுபிறப்பும் உள்ளுவர்- ஏழேழு பிறவியளவும் அன்புடன் நினைப்பர் நன்றியறிவுடையோர்.

எழுவகைப் பிறப்பிலும் நினைப்பர் என்பது பகுத்தறிவிற்குப் பொருந்தாமையின். ஏழேழ் மக்கட் பிறப்பு என உரைக்கப்பட்டது. அதுவும் உயர்வு நவிற்சியே. ஏழேழு என்பது கழிநெடுங் காலத்தைக் குறிக்க வந்த இருமடி நிறைவெண். நீக்கின வினையின் விரைவும் நிறைவுந் தோன்றத் 'துடைத்தல்' என்றார்.

108.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.

(இ-ரை.) நன்றி மறப்பது நன்று அன்று - ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறனன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று - அவர் செய்த தீமையை அன்றே மறப்பது அறனாவது.