உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் வினா விடை - விலங்கியல்/உயிரியல் துறைகள்

விக்கிமூலம் இலிருந்து

அறிவியல் வினா விடை
விலங்கியல்
1. உயிரியல் துறைகள்


1. உயிரியல் என்றால் என்ன?

உயிரிகளை ஆராயும் ஒர் அடிப்படை அறிவியல். தாவரவியல், விலங்கியல், உடலியல் ஆகிய மூன்றும் இதில் அடங்கும்.

2. உயிரி அளவியல் என்றால் என்ன?

உயிரியல் உற்று நோக்கல்ளையும் நிகழ்ச்சிகளையும் புள்ளிவிவர முறையில் பகுப்பது.

3. உயிரி தகவலியல் என்றால் என்ன?

உயிர்கள் பற்றிப் பல தகவல்களை அளிக்கும் துறை.

4. உயிர் அறிவியல் என்றால் என்ன?

உயிர்களைப் பற்றி ஆராயுந்துறை. இதில் உயிரியல், மருத் துவம், விலங்கியல், தாவரவியல் முதலியவை அடங்கும்.

5. உயிரியல் பொறியியல் என்றால் என்ன?

குறையுள்ள அல்லது நீக்கப்பட்ட உடல் உறுப்புகளை ஈடுசெய்யும் வகையில் வடிவமைத்து உருவாக்கப்படும் கருவிகளை ஆராயுந்துறை. எ-டு செயற்கை உறுப்புகள், கேட்க உதவுங்கருவிகள்.

6. உயிரியல் மின்னணுவியல் என்றால் என்ன?

மின்னணுக் கருவிகளை உடலில் பதிய வைத்து மக்கள் நல்வாழ்வுக்கு உதவுவதை ஆராயுந்துறை.

7. நடத்தை இயல் என்றால் என்ன?

விலங்கு நடத்தை சூழ்நிலைத் தகைவு முதலியவற்றை ஆராயுந்துறை.

8. நல்லியல் என்றால் என்ன?

மாந்தரின் மரபுப் பண்புகளை மேம்படுத்துவதை ஆராயுந்துறை.

9. பூச்சியியல் என்றால் என்ன?

பூச்சிகளை ஆராயுந்துறை.

10. பூச்சிக் கவர்ச்சி என்றால் என்ன?

பூச்சிகளினால் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுதல்.

11. உயிர் மின்னியல் என்றால் என்ன?

உயிரிகளில் நடைபெறும் மின்நிகழ்ச்சிகளை ஆராயுந்துறை

12. கண்ணறைவியல் என்றால் என்ன?

உயிரணுக்களையும் அவற்றின் பகுதிகளையும் அமைப்பு நோக்கிலும் வேலைநோக்கிலும் ஆராயுந்துறை.

13. குளிர் உயிரியல் என்றால் என்ன?

உயிர்களில் கடுங்குளிர் விளைவுகளை ஆராய்வது.

14. தொல்லுயிரியியல் என்றால் என்ன?

புவிவளரியலின் ஒரு பிரிவு.அழிந்தொழிந்த உயிரிகள் அவற்றின் புதை படிவங்கள் ஆகியவற்றை ஆராயுந்துறை.

15. நுண் தொல்லுயிரி இயல் என்றால் என்ன?

சிறப்புப் பெற்றுவரும் துறை. நுண்புதைபடிவங்களை ஆராய்வது. குறிப்பாகத் தொல்பொருள்களின் அகவையை உறுதிசெய்வதிலும் எண்ணெய்த் தேட்டத்திலும் பயன் படுவது.

16. மூலக்கூறு உயிரியல் என்றால் என்ன?

உயிரியலில் சிறப்புள்ள மரபணுஅமைப்பை ஆராயுந்துறை.

17. உயிர்விசை இயல் என்றால் என்ன?

உயிரை எந்திரமாகக் கொண்டு அதன் வேலைகளை ஆராயுந்துறை.

18. உயிர் மருத்தவப் பொறிஇயல் என்றால் என்ன?

உயர்சார் மருத்துவத்தைப் பொறிஇயல் தொடர்பாக ஆராயுந்துறை.

19. புது இயல் என்றால் என்ன?

புதுப் பொருள்களை ஆராயுந்துறை.

20. உயிரியல் தொலை அளவை என்றால் என்ன?

ஓரிடத்தில் பதிவு செய்யப்படும் இதயத்துடிப்பு, மூச்சுவிடுதல் முதலிய செயல்களை வானொலி மூலம் மற்றொரு இடத்திலிருந்து அளத்தல்.எடு. புவியிலிருந்து செயற்கை நிலாவிலுள்ள விலங்குகள் மற்றும் வான் வெளி வீரர்களின் இதயத்துடிப்பு, குருதியழுத்தம் முதலியவற்றை வானொலிக் குறியீடு மூலம் அறிதல்.

21. புவிவெளி உயிரியல் என்றால் என்ன?

புவிக்கு அப்பாலுள்ள கோள் உயிரிகளை ஆராயுந்துறை. வானவெளி அறிவியல் என்னும் பரந்த அறிவியலோடு தொடர்புடையது.

22. உருவியல் என்றால் என்ன?

ஒர் உயிரியின் உருவத்தை ஆராயுந்துறை. புற உருவியல் அக உருவியல் என இருவகை.

23. பருவ இயல் என்றால் என்ன?

பருவ நிலைகளில் தாவரங்கள் தாக்குறுவதை ஆராயுந் துறை. குறிப்பாகக் பூக்கள் பூத்தல், பறவை முதலியவை இடம் பெயர்தல் ஆகியவைபற்றி ஆராய்வது.

24. நுண்ணுயிரி என்றால் என்ன?

வெற்றுக் கண்ணுக்குத் தெரியாத உயிர். எ.டு. அமீபா, கிளமிடோமோனாஸ்.

25. நுண்ணுயிரி இயல் என்றால் என்ன?

நச்சுயிர், குச்சி வடிவ உயிர் ஆகியவற்றை ஆராயுந்துறை.

26. கதிரியல் உயிரியல் என்றால் என்ன?

உயிரிகளில் கதிர்வீச்சின் விளைவுகளை ஆராயுந்துறை உயிரியியலின் பிரிவு.

27. கதிரியல் மரபணுவியல் என்றால் என்ன?

கால்வழியால் கதிர்வீச்சு விளைவுகளை ஏற்படுத்தும் மாற்றங்களை ஆராயுந்துறை.

28. உயிரியலின் ஒரு பிரிவு. புவி உயிர்பரவியல் என்றால் என்ன?

இவ்வுலகில் தாவரங்களும் விலங்குகளும் பரவி இருப்பதை ஆராயுந்துறை.

29. உயிரியல் அளவை என்றால் என்ன?

உயிரியலைப் புள்ளி இயல் முறையில் ஆராய்வது. உயிரியல் பயனியல் (பயானிக்ஸ்) என்றால் என்ன? உயிரியின் செயல்களை ஆராய்ந்து, அவ்வராய்ச்சியின் அடிப்படையில் உருவாகும் நெறிமுறைகளைக் கணிப்பொறி முதலியவற்றை வடிவமைக்கப் பயன்படுந்துறை.

31. உயிரியல் இயற்பியல் என்றால் என்ன?

உயிரின் இயற்பியல் பண்புகளை ஆராயுந்துறை.

32. உயிரியல் வேதியியல் என்றால் என்ன?

உயிரின் வேதிப்பண்புக்ளை ஆராயுந்துறை.

33. தகவுப்பாடு அல்லது சரிசெய்துக் கொள்ளுதல் என்றால் என்ன? இதன் நோக்கம் யாது?

தன் உறுப்பு, உறுப்பின் வேலை முதலியவற்றால் ஒர் உயிரி தன்னைத்தானே தக அமைத்துக் கொள்ளுதல். இதன் தலையாய நோக்கம் ஒரு நிலைப்பாட்டை அடைதல்.

34. இதன் வகைகள் யாவை?

1.தனித்தகவுப்பாடு 2. குழுத்தகவுப்பாடு

35. இது எத்துறை சார்ந்தது? எத்துறையில் பயன்படுவது?

உயிரியல்துறை சார்ந்தது. உளவியலில் பயன்படுவது.

36. உயிரியல் வளங்கள் யாவை?

தாவரங்களையும் விலங்குகளையும் உள்ளடக்கிய இயற்கை வளங்கள்.

37. உயிரியல் சேர்க்கை என்றால் என்ன?

உயிரிகள் வேதிப்பொருள்களைத் தொகுத்தல்.

38. உயிரியல் ஒளிர்வு என்றால் என்ன?

உயிர்ப்பொருள்களில் உண்டாக்கப்படும் ஒளி.ஆக்ஸிஜன் ஏற்றப்பண்புடைய லூசிபெரின் என்னும் வேதிப்பொருளினால் ஒளி உமிழப்படுகிறது. இதற்கு லுசிபெரஸ் நொதி பயன்படுகிறது. எ-டு. மின்மினிப்பூச்சி.

39. உயிரியல் கொல்லி என்றால் என்ன?

தீங்குதரும் தாவரம், விலங்கு முதலியவற்றைக் கொல்லும் வேதிப்பொருள். இதில் பூஞ்சைக் கொல்லி முதலியவை

40. உயிரியல் கணிப்பு என்றால் என்ன?

அளவு முறையில் உயிரியல் ஊக்கிகளை மதிப்பிடுவது. எ-டு. அய்ட்ரஜன் மதிப்பீடு.

41. உயிரியல் போர் என்றால் என்ன?

பயிர்களையும் விலங்குகளையும் அழிக்க நோய் உண்டாக்கும் உயிரிகளைப் பயன்படுத்தல்.

42. உயிரியல் வேற்றுமை என்றால் என்ன?

பல வேறுபாடுகளைக் கொண்ட உயிரிகள் இயற்கைச் சமநிலை குலையாது வாழ்தல்.

43. உயிரி ஒழுங்கு என்றால் என்ன?

உயிரியல் தாளமுறை. உயிரியின் நடத்தையில் ஏற்படும் பருவ நிகழ் மாற்றம் உயிரியல் கடிகாரத்தால் நிலை நிறுத்தப்படுவது. எ-டு. பகற்பொழுது ஒழுங்கு.

44. உயிரியல் கோலம் என்றால் என்ன?

உயிர்கள் அடங்கிய உலகம். கல்வெளி, காற்றுவெளி, நீர்வெளி ஆகியவை இதில் அடங்கும்.

45. உயிரியல் முன்னறிவிப்பிகள் யாவை?

நில நடுக்கம் முதலிய இயற்கைச் கேடுகளை முன்கூட்டி அறிவித்து, அவ்விடத்தை விட்டு அகலும் விலங்குகள். எ-டு. எலி, பாம்பு, பறவை.

46. உயிரிகளின் சிறப்பியல்புகள் யாவை?

1. முன்கணியம்
2. அளவும் வடிவமும்
3. கட்டமைப்பு
4. உறுத்துணர்ச்சி
5. வளர்சிதைமாற்றம்
6. வளர்ச்சி
7. குறிக்கோளுடைய செயல்
8. இனப்பெருக்கம்
9. சுழல் மாற்றங்கள்
இவை உயிரற்ற பொருள்களுக்கு இல்லை.

47. உயிரியலின் புதிய துறைகள் யாவை?

நுண்ணுயிரி இயல், மூலக்கூறு உயிரியல், வானவெளி உயிரியல், உயிரி தொழில் நுட்பவியல்.