அறிவியல் வினா விடை - விலங்கியல்/விலங்கியல்
Appearance
1. விலங்கு என்றால் என்ன?
- பிற உயிர்களை உணவாகக் கொள்ளும் இடம் பெயர் இயக்கமுள்ள உயிர்.
2. விலங்குகளின் சிறப்பியல்புகள் யாவை?
- 1. கடற்பஞ்சு தவிர ஏனையவை இடம் பெயர்பவை.
- 2. கண்ணறை, கண்ணறைப்படலத்தாலானது.
- 3. பச்சையம் இல்லாததால் தங்கள் உணவைத் தாங்களே உண்டாக்க இயலாது.
- 4. வளர்ச்சி வரம்புள்ளது
3. விலங்கியலின் பிரிவுகள் யாவை?
1. உருவியல் | - | புறந்தோற்ற இயல். |
2. திகவியல் | - | திசுக்களை அதாவது உள்ளமைப்பை ஆராய்வது. |
3. உடலியல் | - | உடலின் உறுப்பு அதன் செயல்கள் ஆகியவற்றை ஆராய்வது. |
4. வகைப்பட்டியல் | - | விலங்குகளை வகைப்படுத்தல் |
5. சூழ்நிலை இயல் | - | தாவரங்களுக்கும் சூழ்நிலைகளுக்குமுள்ளதொடர்பை ஆராயுந்துறை. |
6. விலங்குப் புவி இயல் | - | விலங்குப் பரவலை ஆராயுந்துறை. |
7. தொல் விலங்கியல் | - | தொல்கால விலங்குகளை ஆராய்வது. |
8. பயனில் உறுப்பியல் | - | குடல் வால் முதலிய பயனில்லாத உறுப்புகளை ஆராயுந்துறை. |
4. உடலியலின் வகைகள் யாவை?
- 1. மனித உடலியல் 2. விலங்கு உடலியல் 3.தாவர உடலியல்.
5. உடல் மின்னியல் என்றால் என்ன?
- மின் நிகழ்ச்சிகளுக்கேற்றவாறு உயிரிகள் எவ்வாறு வியைாற்றுகின்றன என்பதை ஆராயுந்துறை.
6. உடல் என்றால் என்ன?
- விலங்குடல், தாவர உடல், மனித உடல் என இது மூன்று வகை. இவற்றில் மனித உடலிலேயே திட்டமான உறுப்புகள் உண்டு.
7. உடற்குழி என்றால் என்ன?
- விலங்குடலின் உட்குழி.
8. திணை விலங்குகள் என்றால் என்ன?
- மாவடைகள். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வாழும் விலங்குகள். எ-டு மான், புலி.
9. வேலைப்பகிர்வு என்றால் என்ன?
- சமூகப் :பூச்சிகளிடையே அமைந்துள்ள பணிப்பகிர்வு. அரசி இனப்பெருக்கம் செய்தல், வேலைக்காரர்கள் உணவு தேடுதல். இது உயிர் மலர்ச்சியில் ஒரு முன்னேற்ற நிலை.
10. ஒத்த பண்பாக்கம் என்றால் என்ன?
- ஒர் உறுப்பு இழந்த இடத்தில் அதே உறுப்பு உண்டாதல். இது விலங்குகளில் நடைபெறும் ஒரு புதிர். இதை முதன் முதலில் உலக அளவில் 1992இல் தலைப் பரட்டையில் விளக்கிக் காட்டியவர் இந்தியப் பெண் ஆராய்ச்சியாளர் மோகநிதி ஹெஜ்மாதிரி ஆவார்.
11. குற்றிழைகள் என்றால் என்ன?
- தசை இழைகள். புரோட்டோசோவா முதலிய உயிரி களின் உடல் மேற்பரப்பில் காணப்படும் மயிரிழை போன்ற உறுப்புகள் இயக்கத்திற்கும் உணவு உட்கொள்ளவும் பயன்படுபவை.
12. நீளிழைகள் என்றால் என்ன?
- பரமேசியம் முதலிய கீழின உயிர்களில் காணப்படும் தசை இழைகள். இயக்கத்திற்கும் உணவு உட்கொள்ளவும் பயன்படுபவை.
13. விலங்கியலிலிருந்து தோன்றிய பயன்படுஅறிவியல்கள் யாவை?
- கால் நடை அறிவியல், கால் நடை மருத்துவம்.
14. விலங்கியலில் தோன்றியுள்ள புதிய தொழில் நுட்பத் துறை யாது?
- விலங்குயிரி தொழில் நுட்பவியல்.
15. ஆய்கருவி ஆய்வு என்றால் என்ன?
- ஆய்வகத்தில் செய்யப்படும் ஆய்வு. எடு: திசு வளர்ப்பு.
16. உயிரி ஆய்வு என்றால் என்ன?
- ஓர் உயிரியில் நடைபெறும் செயல்களை ஆய்தல்.
17. ஊடுபகுப்பு என்றால் என்ன?
- 1. ஒரு வழிப்படலம் மூலம் தேர்வு விரவல் வாயிலாக அமினோகாடிகள் முதலிய சிறு மூலக்கூறுகளிலிருந்து புரதம் முதலிய பெரிய மூலக்கூறுகள் பிரிக்கப்படும் முறை.
- 2. குருதியில் இருந்து கழிவுகளை இயற்கையில் சிறுநீரகம் பிரிக்கும் முறை. சிறுநீரகம் பழுதுபடுமானால் இப்பிரிப்பு செயற்கைச் சிறுநீரகம் மூலம் நடைபெறும்.