அறிவியல் வினா விடை - விலங்கியல்/வகைப்பாட்டியல்
1. வகைப்பாட்டியல் என்றால் என்ன?
- தாவரங்களையும் விலங்குகளையும் ஒற்றுமைகளின் அடிப்படையில் பல அலகுகளாகப் பிரித்தல் வகைப்பாட்டியல் ஆகும்.
2. வகைப்பாடு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
- 1. விலங்கு வகைப்பாடு
- 2. தாவர வகைப்பாடு
- 3. இயற்கை வகைப்பாடு
- 4. செயற்கை வகைப்பாடு
3. வகைப்பாட்டியலின் தந்தை யார்? அவர் முறை எவ்வகை யைச் சார்ந்தது?
- ஸ்வீடன் நாட்டு இயற்கை ஆராய்ச்சியாளர் லின்னேயஸ். இவர் முறை செயற்கை வகைப்பாட்டு முறை சார்ந்தது.
4. இரு பெயரிடல் என்றால் என்ன?
- ஓர் உயிருக்கு இரண்டு பெயர்கள் அளித்தல். ஒன்று பேரினப் பெயர். இரண்டு சிறப்பினப் பெயர்.எ-டு. ஹோமே! சேப்பியன்ஸ், இதில் முன்னது பேரினப் பெயர். பின்னது சிறப்பினப்பெயர்.
5. இப்பெயரை அறிமுகப்படுத்தியவர் யார்? இதன் சிறப்பென்ன?
- அறிமுகப்படுத்தியவர் லின்னேயஸ். இது ஒர் அறிவியல் பெயர். அனைத்துலகும் பயன்படுத்துவது.
6. வகைப்பாட்டு அலகுகள் யாவை?
- 1. உலகம்
- 2. பெரும் பிரிவு
- 3. வகுப்பு
- 4. வரிசை
- 5. குடும்பம்
- 6. பேரினம்
- 7. சிறப்பினம்.
7. இவ்வலகுகளில் எது சிறப்புள்ளது? ஏன்?
- சிறப்பினமே சிறப்புள்ளது. எல்லா முக்கிய உருவியல் பண்புகளிலும் ஒன்றை மற்றொன்று ஒத்தமையும் தனி உயிரிகளைக் கொண்டதே சிறப்பினம். ஒர் உயிரியை இனங்கண்டறிய இது இன்றியமையாதது.
8. பேரினம் என்றால் என்ன?
9. உயிரினத்தின் இரு வகைகள் யாவை?
- விலங்கினம், தாவர இனம்.
10. வேதி வகைப்பட்டியல் என்றால் என்ன?
- வேதிப்பகுப்பின் நெறிமுறைகளையும் முடிவுகளையும் உயிரினங்களை வகைப்படுத்தப் பயன்படுத்துதல்.
11. இயற்கை வகை என்றால் என்ன?
- இயற்கை உயிர்த் தொகுதிகளில் கொடுக்கப்பட்ட ஒரு மரபணுவின் வடிவம். பொதுவாக எங்கும் காணப்படுவது. இயற்கை வகை இணைமாற்றுகள் (+) வழக்கமாக ஓங்குதிறன் கொண்டவை. இயல்பான புற முத்திரையை உருவாக்குபவை.
12. புது வகை என்றால் என்ன?
- மூலப் பொருள் அழிந்தாலோ இழக்கப் பட்டாலோ மாதிரிவகையாகப் பயன்படுமாறு வடிவமைக்கப்படும் மாதிரி.
13. விலங்குலக இரு பெரும்பிரிவுகள் யாவை?
- 1. முதுகுத்தண்டு உள்ளவை. 2. முதுகுத் தண்டு இல்லாதவை.
14. முதுகுத்தண்டுள்ளவைகளின் பிரிவுகள் யாவை?
- 1. மண்டை ஓடு உள்ளவை. 2. மண்டை ஓடு இல்லாதவை.
15. முதுகுத்தண்டு இல்லாதவைகளின் பிரிவுகள் யாவை?
1. புரோட்டோசோவா | (முன் தோன்றிகள் - அமீபா) | |
2. துளையுடலிகள் | - | கடற்பசு |
3. குழிக்குடலிகள் | - | இழுது மீன் |
4. உருளைப் புழுக்கள் | - | நாக்குப்பூச்சி |
5. முட்தோலிகள் | - | நட்சத்திர மீன் |
6. வளைய உடலிகள் | - | மண்புழு |
7. மெல்லுடலிகள் | - | நத்தை |
8. கணுக்காலிகள் | - | கரப்பான் |
16. இனவளர்ச்சி என்றால் என்ன?
- உயிர்த்தொகுதியின் உயிர் மலர்ச்சி வரலாறு.
17. தனி வளர்ச்சி என்றால் என்ன?
- உயிரணு நிலையிலிருந்து முதிர்ச்சி நிலை வரையுள்ள ஒரு தனி உயிரியின் வளர்ச்சி.
18. பெரும் பிரிவு என்றால் என்ன?
- விலங்குலகின் ஒவ்வொரு பெருந் தொகுதியும் ஒரு பெரும் பிரிவாகும்.
19. விலங்குலகம் எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
- 11 பெரும் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
20. விலங்குகளின் வகுப்புகள் யாவை?
1. மீன்கள் | - | கெண்டைமீன் |
2. நிலம் நீர் வாழ்வன | - | தவளை |
3. ஊர்வன | - | முதலை |
4. பறவைகள் | - | பருந்து |
5. பாலூட்டிகள் | - | பசு |
21. ஒரு விலங்கை வகைப்படுத்தி காட்டுக.
1. உலகம் | - | விலங்கு |
2. பெரும்பிரிவு | - | முதுகுத்தண்டு உள்ளவை. |
3. வகுப்பு | - | பாலூட்டிகள் |
4. பேரினம் | - | பெலிஸ் |
5. சிறப்பினம் | - | டைகிரிஸ், பெலிஸ் டைகிரிஸ் (புலி) |