அறிவியல் வினா விடை - விலங்கியல்/உணவும் ஊட்டமும்
9. உணவும் ஊட்டமும்
1. வைட்டமின்கள்
1. வைட்டமின்களைக் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?
- ஹாப்கின்ஸ் 1906 இல் கண்டறிந்தார்.
2. வைட்டமின்கள் என்றால் என்ன?
- இவை அரிய கரிமச் சேர்மங்கள், உயிரியல் வினை ஊக்கிகள். உணவில் சிறு அளவில் இருந்து பெரும் மாற்றங்களை உண்டாக்குபவை.
3. வைட்டமின் A இன் சிறப்பென்ன?
- கொழுப்பில் கரைவது. இது கரோட்டின் வழிப்பொருள்.
4. இதன் இரு வகைகள் யாவை?
- வைட்டமின் A1 - ரெட்டினால்
- வைட்டமின் A2 - டிகைட்ரோ-ரெட்டினால்
5. கரோட்டின் என்றால் என்ன?
- மஞ்சள் நிறத்தையும் கிச்சலி நிறத்தையும் உண்டாக்கும் நிறமி. வைட்டமின் ஏ முன்னோடி.
6. வைட்டமின் A வின் வேலைகள் யாவை?
- 1. தோல்நலத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் காரணம்.
- 2. இரவுப் பார்வை, தடுப்பாற்றல் ஆகியவற்றிற்குக் காரணம்.
7. வைட்டமின் A உள்ள உணவுப் பொருள்கள் யாவை?
- பால், வெண்ணெய், கல்லீரல், மீன் எண்ணெய்.
8. இதன் குறைநோய் யாது?
- இரவுக்குருடு
9. இரவுக்குருடு என்றால் என்ன?
- இரவில் பார்வை தெரியாமை. வைட்டமின் A குறைவினால் ஏற்படுவது.
10. வைட்டமின் B1 இன் வேலை யாது?
- பசியைத் துண்டி நரம்புகளை நன்னிலையில் வைப்பது.
11. இது அடங்கியுள்ள உணவுப்பொருள்கள் யாவை?
- முட்டை, கனிகள், முளைக்கோதுமை, பச்சைப்பட்டாணி.
12. இதன் குறைநோய் யாது?
- பெரிபெரி.
13. நியோசின் என்றால் என்ன?
- நீரில் கரையக்கூடிய B தொகுதி வைட்டமின்களில் ஒன்று. வேறு பெயர் நிகோடெணிகக் காடி
14. தோல் கரடு என்னும் தோல் நோயைத் தடுப்பது எது?
- வைட்டமின் B1
15. ரிபோபிளேவின் என்றால் என்ன?
- வைட்டமின் B2 உயிரணுவளி ஏற்றத்திற்குத் காரணமானது.
16. வைட்டமின் B2 இன் வேலை என்ன?
- தோல்நலத்தையும் தசை நலத்தையும் பாதுகாப்பது.
17. இது அடங்கியுள்ள பொருள்கள் யாவை?
- பால், முட்டை, பசுங்காய்கறிகள்.
18. இதன் குறை நோய் யாது?
- நாக்கழற்சி.
19. வைட்டமின் B3 இன் வேலை யாது?
- வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது.
20. இது அடங்கியுள்ள உணவுப் பொருள்கள் யாவை?
- முட்டை மஞ்சள், ஈஸ்டு, கல்லீரல்.
21. இதன் குறைநோய் யாது?
- தசைப்பிடிப்பு.
22. பான்தோதெனிகக்காடி என்றால் என்ன?
- வைட்டமின் B தொகுதியைச் சார்ந்தது. இது குறையுமானால் தோல் கோளாறு, உணவு வழிக்கோளாறு ஏற்படும்.
23. அடர்மின் என்றால் என்ன? இது எவற்றில் காணப்படுகிறது?
- வைட்டமின் B4 பால்காடி நுண்ணுயிரிகள், சில பூஞ்சைகள். ஈஸ்டுகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது
24. வைட்டமின் B4 இன் வேலை யாது?
- அமினோ காடித்தொகுப்பைக் கட்டுப்படுத்துகிறது.
25. இது அடங்கியுள்ள உணவுப்பொருள்கள் யாவை?
- ஈரல், இலைக்காய்கறிகள்.
26. இதன் குறைநோய் யாது?
- உறக்கமின்மை.
27. வைட்டமின் B12 இன் வேலை யாது?
- குருதி உண்டாக இன்றியமையாதது.
28. இது அடங்கியுள்ள உணவுப் பொருள்கள் யாவை?
- ஈரல், இறைச்சி.
29. இதன் குறைநோய் யாது?
- குருதிச் சோகை.
30. போலிகக் காடி என்றால் என்ன?
31. பயாட்டின் என்றால் என்ன?
- வைட்டமின் B தொகுதியில் ஒன்றான H. இதன் துணை நொதி R. குடல் தாவர ஊட்டத்தால் தொகுக்கப்படுவது. இது குறையுமானால் தோலழற்சி உண்டாகும்.
32. பெரிபெரி என்றால் என்ன?
- வைட்டமின் B1 குறைவினால் ஏற்படும் நோய். பச்சரிசி உண்ணுவது ஒரு முக்கியக் காரணம்.
33. பெரிபெரியின் அறிகுறிகள் யாவை?
- 1. நரம்பழற்சியால் வலி
- 2. ஒரு பக்கவாதம்
- 3. தசையழிவு
- 4. உளக்குலைவு
- 5. மாரடைப்பு
34. வைட்டமின் B12லுள்ள ஏனைய வைட்டமின்கள் யாவை?
- பயாடின், லிபாயிகக்காடி, போலிகக்காடி.
35. வைட்டமின் C இன் வேலை என்ன?
- இதன் வேதிப் பெயர் அஸ்கார்பிகக்காடி எலும்பையும் இதயத்தையும் நன்னிலையில் வைப்பது.
36. இது அடங்கியுள்ள உணவுப்பொருள்கள் யாவை?
- நாரத்தை, எலுமிச்சை, தக்காளி, நெல்லிக்கனி.
37. இதன் குறைநோய் யாது?
- ஸ்கர்வி
38. வைட்டமின் Dயின் வேலை யாது?
- இதன் வேதிப்பெயர் கால்சிபெரால். கொழுப்பில் கரைவது. கால்சிய வளர்சிதை மாற்றத்திற்குக் காரணம்.
39. இது அடங்கியுள்ள உணவுப்பொருள்கள் யாவை?
- மீன் எண்ணெய், நெய்.
40. இதன் குறைநோய் யாது?
- ரிக்கட்ஸ்.
41. வைட்டமின் Dயின் வகைகள் யாவை?
42. வைட்டமின் E இன் வேலை என்ன?
- இதன் வேதிப்பெயர் டோக்கோஃபெரால் கொழுப்பில் கரைவது. ஆற்றல் அளிப்பது.
43. இது அடங்கியுள்ள உணவுப் பொருள்கள் யாவை?
- முருங்கைக்காய், இறைச்சி.
44. இதன் குறைநோய் யாது?
- மலடு.
45. வைட்டமின் H இன் வேதிப்பெயர் என்ன?
- பயாடின்.
46. வைட்டமின் K இன் வேலை என்ன?
- இதன் வேதிப்பெயர் பில்லோகுயினோன். கொழுப்பில் கரைவது. குருதிக்கட்டைத் தூண்டுவது.
47. இது அடங்கியுள்ள உணவுப்பொருள்கள் யாவை?
- மஞ்சள் கரு, பால், பசுங்காய்கறிகள்.
48. வைட்டமின் G இன் வேதிப்பெயர் என்ன?
- ரிபோபிளேவின்
வைட்டமின் இன் வகைகள் யாவை?
- K1 - பைட்டனோடையோன்.
- K2 - மெனாகுயுனோன்.
- K3 - மெனாடையோன்.
50. வைட்டமின் L இன் வேலை யாது?
- பால் சுரக்கக் காரணமாக இருப்பது.
51. வைட்டமின் L இன் இரு வகைகள் யாவை
- வைட்டமின் L1 - மாட்டுக் கல்லீரல் பிழிவில் உள்ளது.
- வைட்டமின் L2 - ஈஸ்ட்டில் உள்ளது.
52. வைட்டமின் M இன் வேதிப்பெயர் என்ன?
- போலிகக் காடி.
62. குறைநோய்கள் என்றால் என்ன?
54. குடிநீர்மங்கள் என்றால் என்ன?
- பானங்கள். பருகுவதற்குத் தகுதியுள்ளவை. தேநீர், பால், இளநீர் முதலியவை இயற்கைப் பானங்கள். பெப்சி, கோகோகோலா முதலியவை செயற்கைப் பானங்கள்.
2. உணவு
55. உணவு என்றால் என்ன?
- உண்டபின் செரிக்கத்தக்கதும் தன்வயமாகக் கூடியதும் உணவாகும். எ-டு. அரிசி.
56. இரைஇயல் என்றால் என்ன?
- உணவுத்தேர்வு, உணவு உண்டாக்கல், உண்ணல் ஆகியவை பற்றி ஆராயுந்துறை. உணவியல் என்றுங் கூறலாம்.
57. உணவைக் குவளையில் அடைத்தல் என்றால் என்ன?
- உணவைப் பாதுகாக்கும் முறைகளில் ஒன்று. எ-டு மாங்காய் ஊறுகாய்.
58. உணவு மதிப்பு என்றால் என்ன?
- திசுவில் உணவு கணற்சி அடையும்பொழுது உண்டாகும் ஆற்றல்.
59. விரைவுணவு என்றால் என்ன?
- உண்ணும் பொழுது விரைவாகக் கரையும் உணவு. எ-டு பனிக்குழைவு, பனிச்சூப்பி.
60. சமன்செய்த உணவு என்றால் என்ன?
- சமச்சீர் உணவு. உணவின் பகுதிகள் குறிப்பிட்ட வீதத்தில் அமைந்து தோராயமாக 3000 கலோரி வெப்பத்தைத் தரும் உணவு.
61. உணவின் ஆறுபகுதிகள் யாவை?
- மாப்பொருள், புரதம், கொழுப்பு, நீர், தாது உப்புகள்,
62. சமன் செய்த உணவின் வேலைகள் யாவை?
1. உடலுக்கு வளர்ச்சி அளிக்கிறது.
2. உடலுக்கு வெப்பம் தந்து, உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைக்கிறது.
3. வேலை செய்ய ஆற்றலைத் தருகிறது.
63. உணவில் நஞ்சு கலத்தல் என்றால் என்ன?
- உணவில் தீங்கு தரும் உயிரிகளின் நஞ்சு சேர்ந்து தொல்லை தருதல். பல்லி உணவில் விழுதல்.
64. பால் என்பது என்ன?
- இது ஒரு நிறைவுணவு. எல்லா வைட்டமின்களும் மற்ற உணவின் பகுதிகளும் உள்ளன.
65. மாப்பொருள் என்றால் என்ன?
- உணவின் ஆறு பகுதிப் பொருள்களில் ஒன்று. ஸ்டார்ச்சும் சர்க்கரையும் சேர்ந்தது. ஆற்றலைத் தருவது.
66. புரதம் என்பது யாது?
- ஒரு கரிமச் சேர்மம். அமினோகாடிகளாலானது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. பருப்பிலும் இறைச்சியிலும் அதிகம்.
67. புரதத்தொகுப்பு என்றால் என்ன?
- பகுதி உறுப்பான அமினோகாடிகளிலிருந்து உயிரணுக் கள் புரதம் உருவாக்கும் முறை. இதைக் கட்டுப்படுத்துவது டிஎன்ஏ.
68. புரதப்பகுப்பு என்றால் என்ன?
- புரதங்களை அமினோகாடிகளாக நீரால் பகுத்தல்.
69. அமினோகாடிகள் என்றால் என்ன?
- உயிர் வளர்ச்சிக்குத் தேவையான இன்றியமையா வேதிப்பொருள்கள்.
70. இவற்றின் எண்ணிக்கை எத்தனை?
- மொத்தம் 20. பயனுள்ளவை 10. பயன் குறைந்தவை 10.
71. பயனுறுஅமினோகாடிகள் யாவை?
- போதிய அளவு ஓர் உயிரில் தொகுக்க இயலாதவை. இவை புரதத் தொகுப்பிற்கு இன்றியமையாதவை. இவை 8. எ டு. அர்ஜினைன், லைசின்.
72. உடலில் தொகுக்கப்படும் பயனுறாக்காடிகள் எத்தனை?
- பயனுறாஅமினோகாடிகள் 12
73. நார்ப்புரதம் (கொல்லேஜன் என்றால் என்ன?
- இணைப்புத்திசுவிலுள்ள நார் போன்ற புரதம். எலும்புப் பசையாக மாறுவது. தோல், தசைநார், எலும்பு முதலியவற்றிலுள்ள முதன்மையான புரதம்.
74. ஜி. புரதங்கள் என்பவை யாவை?
- இவை இயற்கைப்புரதங்கள். இவற்றை டாக்டர் ஆல்பிரட் ஜி. கில்மன், டாக்டர் மார்டின் ஏரிட்பெல் ஆகிய இரு அமெரிக்கக் அறிவியலார் கண்டுபிடித்தனர். 1994 இல் உடலியல் மருத்துவத்துறைக்குரிய நோபல்பரிசை இவ்விருவரும் பெற்றனர்.
75. 1994 ஆம் ஆண்டின் மூலக்கூறு எனச் சிறப்பிக்கப்பட்டது எது?
- புரதக்குடும்பம். இது நம் நிறப்புரிகளின் வேதி ஒழுங்கு பாட்டை காப்பது. டிஎன்ஏ தொடர் நெடுகச் செல்வது.
76. சேப்பிரான்கள் என்பவை யாவை?
- சிறப்பு மூலக்கூறுகள். இவை மடியும் வரை புதிதாகத் தோன்றும் புரதங்களைப் பாதுகாப்பவை.
77. கொழுப்புகள் என்பவை யாவை?
- கரி, அய்டிரஜன், ஆக்ஸிஜன் ஆகிய மூன்று தனிமங் களையுங் கொண்ட கரிமச் சேர்மங்கள். எ-டு எண்ணெய், நெய். உடலுக்கு வெப்பத்தையும் ஆற்றலையும் அளிப்பவை.
78. கொழுப்புப் பன்மச் சர்க்கரைடு என்றால் என்ன?
- இது புற்று நோயைத் தடுக்கும் புதிய பொருள் உயிரணுவில் உள்ளது. இதை ஜப்பானிய அறிவியலார் கண்டு பிடித்துள்ளனர். (1994)
79. பயனுறுகொழுப்புகாடிகள் யாவை?
- உணவில் இயல்பாக இருக்க வேண்டியவை. எ டு லினோ லிகக் காடி
80. பயனுறுஎண்ணெய் என்றால் என்ன?
- மணமுள்ள இயற்கை எண்ணெய். எ-டு நாரத்தை எண்ணெய், கிராம்பு எண்ணெய், பூ எண்ணெய்கள்.
81. வளர்சிதைமாற்றம் என்றால் என்ன?
82. அடிப்படை வளர்சிதைமாற்றம் என்றால் என்ன?
- உடலில் உயிர் நிலைத்திருப்பதற்கு வேண்டிய வளர்சிதை மாற்றம்.
83. வளர்மாற்றம் என்றால் என்ன?
- வளர்சிதை மாற்றத்தின் ஆக்க நிலை. இதில் திசுக்கள் முன்கணியத்தில் உண்டாக்கப்படுகின்றன. எ-டு தன்வய மாதல், அதாவது செரித்து உறிஞ்சப்பட்டஉணவு திகவாக மாறுதல்.
84. சிதைமாற்றம் என்றால் என்ன?
- வளர்சிதை மாற்றத்தின் சிதைவுப்பகுதி. இதில் அரிய பொருள்கள் எளிய பொருள்கள் ஆகும். உயிர் வேலை செய்ய ஆற்றல் கிடைக்கும். எ-டு ஆக்ஸிஜன் ஏற்றம். இச்செயல் திசுக்களில் நடைபெறுவது.
85. பாதுகாப்புப் பொருள்கள் யாவை?
- உணவுப் பொருள்கள் கெடாமல் இருக்க உதவுபவை. ஊறுகாயில் உப்பு, கடுகு எண்ணெய் முதலியவை சேர்க்கப்படும். இறந்த விலங்குகளையும் தாவரங்களையும் பாதுகாக்கப் பார்மலின் பயன்படுகிறது.
3. ஊட்டம்
86. ஊட்டம் என்றால் என்ன?
- உயிர்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பொருள்களிலிருந்து அவற்றைப் பெறும் முறை.
87. ஊட்டத்தின் பயன்கள் யாவை?
- 1. உடல் வளர்ச்சிக்கும் உடலைப்பழுதுபார்ப்பதற்கும் இது தேவை.
- 2. நல்ல ஊட்டம் நல்ல உடல் நலத்தை அளிப்பது.
88. வடிகட்டி உணவுக் கொள்ளல் என்றால் என்ன?
89. முழு விலங்கு ஊட்டம் என்றால் என்ன?
- பெரும்பாலான விலங்குகளில் இது உண்டு. இதில் உட்கொள்ளல், விழுங்குதல், செரித்தல், உட்கவர்தல், தன்வயமாதல், வெளியேற்றல் என்னும் செயல்கள் நடைபெறும்.
90. தன்விழுங்கள் என்றால் என்ன?
- தற்செரிமானம். ஓர் உயிரியின் குறிப்பிட்ட கண்ணறைகள் மிகையாக உள்ள அல்லது சிதைந்த கண்ணறை உறுப்புகளைச் செரிக்க வைத்தல்.
91. நுண் விழுங்குணவு கொள்ளல் என்றால் என்ன?
- தொங்குணவு கொள்ளல். நுண்ணுவுகளைக் கொள்ளல். பரமேசியம் முதலிய உயிரிகள்.
92. நுண்ணுயிரி விழுங்கிகளை யார் எப்பொழுது கண்டறிந்தனர்?
- 1915-1916 இல் பிரடரிக் வில்லியம் டுவாட், பெலிக்ஸ் ஹிபாட்டெகரெலி ஆகிய இருவரும் கண்டறிந்தனர்.
93. பெருவாழ்வியல் என்றால் என்ன?
- வாழ்நாள் நீட்டிப்பை ஆராயுந் துறை.
94. பெரு ஊட்டப் பொருள் என்றால் என்ன?
- ஒரு தாவரத்தின் இயல்பான வளர்ச்சிக்குத் தேவைப்படும் அடிப்படைத் தனிமம். எ-டு கரி, நீர்வளி, இரும்பு, மக்னீசியம், நைட்ரஜன் முதலியவை.
95. பெருவிழுங்கி என்றால் என்ன?
- இது பெரிய அமீபா அணு. குச்சி வடிவ உயிரிகளை அழிப்பது. சிதைந்த கண்ணறைகளையும் சிவப்பணுக் களையும் அழித்துவிழுங்க வல்லது. இவ்வாறு விழுங்கும் செயல் பெரு விழுங்கல் ஆகும். நோய்க்கு எதிராக உள்ள பாதுகாப்பு அமைப்பு இது.
96. விழுங்கணுக்கள் என்பவை யாவை?
- ஒருவகைக் குருதி வெள்ளணுக்கள். தீங்குதரும் வெளிப் பொருள்களையும் குச்சிவடி உயிரிகளையும் விழுங்கிச் செரிக்க வைப்பவை.
97. ஒட்டுண்ணி என்றால் என்ன?
- அடுத்த உயிரை அண்டி வாழும் உயிர். இது வாழ ஓம்புயிர் தேவை. இது அக ஒட்டுண்ணி, புற ஒட்டுண்ணி என இருவகை. இது தான் வாழும் உயிருக்குத் தீமை விளைவித்துத் தான் நன்மை பெறுவது. எ-டு நாக்குப்பூச்சி, ஈரல் புழு.
98. புறவாழ்வி என்றால் என்ன?
- ஏனைய உயிர்களின் மேல் வாழும் விலங்கு.
99. அக ஒட்டுண்ணி என்றால் என்ன?
- உடலின் உள்ளே வாழும் ஒட்டுயிரி. எ-டு நாடாப்புழு.
100. கட்டாய ஒட்டுண்ணி என்றால் என்ன?
- வேறு வழியில்லாது கட்டாயம் பிற உயிரைச் சார்ந்துள்ள உயிரி. எ-டு ஈரல் புழு, நாடாப்புழு.
101. ஓம்புயிர் என்றால் என்ன?
- ஒட்டுண்ணி வாழ இடமளிக்கும் உயிரி. இது இருவகை.
- 1. திட்ட ஒம்பி - புகையிலை
- 2. இடைநிலை ஒம்பி - அனோபிலஸ் கொசு
102. ஊனுண்ணி என்றால் என்ன?
- உயிரின் சதையை உண்ணும் விலங்கு. எ-டு சிங்கம், புலி
103. தாவர உண்ணி என்றால் என்ன?
- புற்கள் மற்றும் தாவரங்களை மட்டும் உண்ணும் விலங்கு. எ-டு யானை, முயல்.
104. அனைத்துண்ணி என்றால் என்ன?
- அனைத்துப் பொருள்களையும் உண்ணும் விலங்கு. காகம் தாவரப்பொருள், விலங்குப் பொருள் ஆகிய இரண்டையும் உண்பது.
105. தன்னின உண்ணி என்றால் என்ன?
- தன்னின உயிர்களைத் தானே உண்ணும் உயிரி. அரச நாகம் சிறிய பாம்புகளை இரையாக உண்ணும்.