உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய தீபம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அதியமான் அஞ்சி 129 நூற்றாண்டில் தோன்றிய வேள்விக்குடிச் சாஸனத்தில் சுமார் கி.பி.5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த களப்பிரன் என்பானைக் குறித்து, அளப்பரிய அதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் [பின் களப்ரனென்னுங்கலியரைசன் கைக்கொண்டதனை இறக்கிய என வருகின்றது.எனவே,கி.பி.5-ம் நூற்றாண்டிற்கு முன்பே அதிராஜர்கள் பலர் இருந்தமை புலப்படுகிறது. எனவே, அதிராஜர் என்பதன்கண் அடங்கிய கருத்துத் தமிழ் நாட்டில் மிகப் பண்டைக்காலந் தொட்டே மேற் கொள்ளப்பட்டு வந்தது என்று ஊகிக்கலாம். மான ஸாரத்திற்கு 1 முன்புள்ள பல நூல்களிலும் அரசர் கூறுபாடு களும் இயல்புகளும் கூறப்பட்டிருந்தன என்று கருதுவதற்கும் இடமுண்டு. ஏனெனின், அதன்கண் வரும் இவ்வரசர் இயல்புகள் 'வேத புராண சாஸ்திரங்களினின்று தொகுக்கப் பட்டுள்ளன' என்று ஒரு வாக்கியம் காணப்படுகிறது (42, 79-80). ஆனால், மானஸாரத்திற்கு முந்திய நூல்களுள் எதன்கண் இப்பாகுபாடு முதலியன உள்ளன என்பது ஆராய்ந்து தெளியப்படுதல் வேண்டும். தெளிந்தால், சங்க காலத்தில் தானே இவ்வடமொழிக் கருத்துக்கள் தமிழ் நாட்டில் நிலவின என்பது உறுதிபெறலாம். தமிழ் மக்களுடைய நாகரிகத்திற்கும் வடமொழியாளர் களுடைய நாகரிகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பின் தன்மை தெளிவுபெற இன்னும் ஆராய்ச்சி செய்யப்பட வில்லை. ஆராய்ச்சி பெருகப் பெருக, இரண்டு இனத்தவர் 1. இந்நூவின் காலம் கி. பி. 500-க்கும் 700-க்கும் இடைப் பட்டதாகலாம் என்பர் (P. K. Acharya : Dictionary of Hindu Architecture and Indian Architecture). இ. தீ.9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/138&oldid=1500949" இலிருந்து மீள்விக்கப்பட்டது