உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புத்தர் அவதாரம் உம்பரும் அன்று மனிதராய் மாறி உலாவிக் களித்துநின்றார்- என்றும் அம்புவி வாழ இறைவனும் வந்தங்கு அவதரித் தான்எனவே. பெரியோர் மன்னனுக்கு உணர்த்தல் வேறு 15- 22 உண்மையிது சிறிதேனும் உணரா னால் ஒப்பரிய சுத்தோதனப்பேர் மன்னன், அண்மையில் நேர்ந்தது, அபசகு னமென்ன அயர்ந்து மனம்வாடி யங்குஇருந்த காை 23: வேறு கற்ற பெரியோர் கனாநூல் அறிந்தவர்கள் கொற்றமுடி மன்னவனைக் கோயிவிலே சென்றுபணிந்து "உலகம் முழுதும் ஒருகுடைக்கீழ் ஆளுமன்னன், அலகில் புகழுடையான், ஆண்மைத் திருவுடையான், ஓரா யிரமாண்டுக்கு ஒருமுறை தோன்றுமவன். (5)- சீரார் பெருமான், உன் செல்வமக னாய்வத்தான்; எண்ணற் கரியபேறு ஏழுபெரும் பேறுஇந்த மண்ணில் அவனுக்கு வாய்த்திருப்ப துண்டுஐயா! தெய்வீகமான திருவாழி ஒன்றாகும்; எய்தற் கரிய இரத்தினம் ஒன்றாகும்; (10) ஆகாய வீதிசெலும் அசுவமும் ஒன்றாகும்; வாகான வெள்ளை வாரணமும் ஒன்றாகும்; மதியிற் சிறந்தவொரு மந்திரி தானுண்டு; சதுரில் தளராவோர் தளகர்த்தன் தானுண்டு; காலைத் திருவின் சுவினிற் சிறந்தநங்கை (15) சேலொத்த கண்ணியொரு தேவியும் உண்டு" என்றார். 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/16&oldid=1501117" இலிருந்து மீள்விக்கப்பட்டது