________________
22 ஆசிய ஜோதி மடியில் வைத்து மார்போடு அணைத்துத் (25) தழுவித் தழுவித் தளர்ச்சி நீக்கினன். அப்பால், இடக்கையிற் பறவையை ஏந்தி, அம்பினை வலக்கை யதனால் வாங்கி, வடிந்த உதிரம் மாற்றி, உறுத்திய புண்ணில் (30) தேனும் தளிரும் சேர்த்துப் பிசைந்து பூசியே வருத்தம் போக்கினன்.ஆங்கே இத்தனை அன்பு காட்டினன் எனினும் அவள், நேரவு நொம்பலம் நோயின் தன்னம (35) இந்நாள் வரையிலும் யாதுஎன அறியான். ஆதலின், பறவையின் மீது பாய்ந்த அம்பின் முனையைத் தனது முழங்கை யதனில் அமுக்கிப் பார்த்தனன்; 'ஐயோ!" என்றளன்; (40) பரித்து பின்னும் பறவையை எடுத்துத் தாயினும் இரங்கித் தழுவி அணைத்தனன். சேவகன் பறவையைக் கேட்டல் சிறிது நேரம் சென்றபின், அங்கோர் சேவகன் வந்து தெண்டனிட்டு, 'எங்கள் அரச குமரன்ஓர் அன்னப் பறவையை (45) எய்து வீழ்த்தினன்; வீழ்ந்த இடமும் மலர்மிரு ரோஜா வளமிது வேயாம்; யாதும் தாமத மின்றி அவளிடம் அன்னப் பறவையை அனுப்பிடு மாறுஇங்கு என்னை உன்பால் ஏவினன்" என்றனன் (50)