உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் பிறந்த கதை திருந்திய நெற்றியில் திலகமும் தொட்டுச் சிற்றடி றெந்திடச் செம்பஞ்சும் ஊட்டி மணவறை ஏறும் மங்கையர் போல மன்னவன் கோயில்முன் வந்து கூடினர். அந்தாள். பொற்சிங் காதனம் பொலிவுற அமர்ந்த அரசிளங் குமரனை அஞ்சன விழிகள் நிமிர்ந்து நோக்காது நிலத்தையே நோக்க, வரிசையாய் மங்கையர் வந்து வந்து பரிசுகள் பெற்றுப் பணிந்துசெல் காட்சி யாவரும் நோக்கி இன்புறற்கு உரியதாம். வந்து கண்ட மங்கையர் உள்ளம்ஓர் நிலையில் நில்லாது அலையச் செய்தது திருவளர் செவ்வன் திருமுகப் பொலிவோ! அப்பால் யாதோ? அறிபவர் யாரே? மன்னர் மகனோ, மனத்தில் சலனம் யாதும் இன்றி இருந்தனன்; அவன்முகம் சாந்தமும் அமைதியும் தண்ணிய அருளும் தவமும் காட்சியே தந்தது; ஆயினும், அவன் கன்னியர்க்கு எட்டாக் கனியே ஆயினேன். கூடி நின்றவர் குமரி ஒருத்தியை, "இவள்: அழகிற் சிறந்தவள்; ஐயமில்லை, அரசிளங் குமரன் அன்பிற்கு உரியாள் இவளே யன்றி வேறு யாவரும் உளரோ?** என்று புகழுரை இயம்பவே; அதனால் மங்கை அவளும் மனந்தடு மாறி நடுக்க முற்றஓர் நலியே போல அரியா சனத்தின் அருகில் சென்றும் வழங்கும் பரிசினை வாங்கிடாது ஓடிச் சேடிய ரோடு சேர்ந்து நின்றனள் அத்தனை ஜோதி / அத்தனை மகிமை! அத்தனை தெய்வ அருட்கலை பொலிந்தது 31 120 123 130 135 140 143 150

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/32&oldid=1501705" இலிருந்து மீள்விக்கப்பட்டது