உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஆசிய ஜோதி எல்லாம் வல்வார் எவரும் உளரோ? இரக்க முன்னார் இருக்கின் றனரோ? கண்ணால் அவரைக் கண்டவர் உண்டோ? வணங்கி நித்தம் வழிபடு வோர்க்கு அவர் செய்திடும் நன்மை சிறிதும் உளதோ? எத்தனை எத்தனை எத்தனை மனிதர்- காலை மாலை கண்கள் இரண்டும் மூடி விருந்து முணுமுணு வென்று செபங்கள் நிதமும் செபித்திடு கின்றனர்? கோபுரம் சிகரம் கொடிமர மெல்லாம் வானுற ஓங்கி வளரும் ஆலயம் அழகழ காக அமைத்திடு கின்றனர்? மந்திரம் போனகம் வாடா விளக்குஇவை நித்தம் நடைபெற நிலம்விடு இன்றனர்? துடிக்கத் துடிக்கத் துள்ளும் மறிகளைப் பகுத்தறி வின்றிப் பலியீடு கின்றனர். அன்ன சாலையில் அந்தணர் நிதமும் உண்டு கனிக்க உணவிடு கின்றனர்! அன்னியர்க்கு அல்ல அடியவர்க்கு எனினும் இவ்வுல கதனில் யாதும் ஒருநலம் செய்தறி யாத தேவரை நோக்கிக் 'கங்கா தரனே, கண்ண பிரானே! காப்பாய் காப்பாய் காப்பாய்' என்ன, (அன்பின் மிகுதியோ அச்சமோ அறியேம்) தொழுது போற்றும் தோத்திரப் பாக்கள் வானில் முழங்கும் வல்லிடி போல என்றும் என்றும் எழுந்திடு கின்றன! இவற்றால், வாழ்க்கையில் நித்தம் வளருந் துயரோ?- ஆசைப் பொருளை அடையாத் துயரோ இருந்த பொருளை இழந்த துயாரா 85 90 93 100 103 110 115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/41&oldid=1502295" இலிருந்து மீள்விக்கப்பட்டது