உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைப்பும் ஒழுக்கமும்

மனத்தில் இடைவிடாது வைத்துக்கொண்டிருந்த செயலின் யோன பாகுக உண்டானே

மனிதன் ஆவதும் அழிவதும் தன்னாலே. நினைப்பாகிய உலைக்களத்தில் சில படைக்கலங்களைச் செய்து, அவற்றால் தன்னை அழித்துக்கொள்கிறான்; அவ்வுலைக் கவத்திற்றானே சில கருவிகளைச் செய்து, அவற்றால்வலிமை, சந்தோஷம், அமைதி என்னும் திவ்வியமான அரண்களைத் தனக்குக் கட்டிக்கொள்கிறான். மனிதன் நல்ல நினைப்புக்களைக் கைக்கொண்டு நல்லவழிகளில் செலுத்துவதனால் தெய்வத்தன்மைபை அடைகின்றான்; கெட்ட நினைப்புக்களைக் கைக்கொண்டு கெட்ட வழிகளில் செலுத்துவதனால் மிருகத்தன்மையை அடைகின்றான். அதிஉயர்வும் அதிதாழ்வுமான இந்த இரண்டுக்கும் இடையிலேயுள்ளன மற்றைய ஒழுக்க வேறுபாடுகளெல்லாம். அவைகளை இயற்றுங் கருத்தாவும் மனிதனே; ஏவுங்கருத்தாவும் மனிதனே.

இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆன்ம சம்பந்தமான அழகிய உண்மைகளுள் மனிதன் நினைப் பின் கருத்தா; ஒழுக்கத்தை கருக்கட்டுகின்றவன்; நிலையையும் சுற்றுச்சார்பையும் விதியையும் உண்டாக்கி உருப்படுத்துகின்றவன்- என்ற உண்மையைப்போல் சந்தோஷத்தை அளிக்கத்தக்கதும், தெய்வத்தன்மை யையும் உறுதியையும் விளைக்கத்தக்கதும் வேறொன்யில்லை.

19